பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198: அணுக்கரு பெளதிகம் கொண்டிருக்கும் ஒரு வான் கம்பியின் இரட்டைத் துருவத் திருப்பு திறன் (Dipole moment) மாருத நிலையிலிருக்கும்படி வைத்திருக்கப்பெற்ருல், அதிர்வு-எண் எவ்வளவுக்கெவ் வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு கதிர் வீசலும் உறைப்பாக(Stronger)இருக்கும்.திருப்புதிறன்மாருத நிலையிலிருக்க வேண்டுமாயின், அலேவியற்றும் சுற்றின் மின் தங்கியின் (Condenser) தட்டுகளுக்கிடையில் உச்சநிலை வோல்ட்டு அளவு மாரு திருக்க வேண்டும். ஒரு புள்ளியில் அலைகளின் உறைப்பு அதிர்வு-எண்ணின் நான்கு அடுக்கிற்கு (Fourth power) விகித சமமாகவுள்ளது. பீட்டாக் கதிர் வீசவின் அலைகளைப் பொறுத்தவரை நிலைமை ஒரே ஒரு வேறு பாட்டுடன் அதனையொத்தே உள்ளது: அஃதாவது, அதனு டைய ஆற்றல் அதிர்வு-எண்ணின் நான்கு அடுக்கிற்கு விகித சமமாக இல்லை; ஆளுல்-ஃபெர்மி என்பாரால் மேற்கொள் ளப் பெற்ற நுண்ணிய கொள்கை நிலைப் பகுத்தறி முறை (Thearetical analysis) காட்டுகின்றபடி-அஃது-அதிர்வு-எண் னின் ஆறு அடுக்கிற்கு விகித சமமாக உள்ளது. ஆகவே, சிதைந்தழிதல் ஏற்படுநிலை (ஒரு விளுடியில் வெளிவிடப் பெறும் ஆற்றலைத் தனிப்பட்ட சிதைந்தழிதல் ஆற்றலால் வகுத்து வரும் ஈவு) சிதைந்தழிதல் செயலுக்குக் கிடைக்கக் கூடிய ஆற்றலின் ஐந்தாம் அடுக்கிற்கு விகித சமமாக உள் ளது என்பது பெறப்படுகின்றது. இன்னுெரு கருத்தினைப்பற்றிய புதிய ஆராய்ச்சி: மேற்கூறிய ஆராய்ச்சிகள் (Considerations) பொதுப் படையான உண்மை நிலைகளை எடுத்தியம்புகின்றனவே யன்றி, அவை அளவறி முறையில் சரியாக இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை. இந்தப் பொருளைப்பற்றி முழுவதும் புரிந்து கொள்வதற்கு முன்னதாக, இன்னொரு ஆராய்ச்சியை யும் நாம் கருதவேண்டும்.வான் கம்பியின் இரட்டைத் துருவத் 9. Quirts)—Fermi