பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ü 6 அணுக்கரு பெளதிகம் நியூட்ரானிடமிருந்து (Foreign neutron) SIG தாக்குதலைப் பெறுகின்றது; அதன் பிறகு அவை மற்றைய துகள்களுடன் மோதுகின்றன. நியூட்ரான் அணுக்கருவின் உட்புறத்தைத் துளைத்துச் சென்று அதன் ஆற்றல் அங்குள்ள எல்லாத் துகள் களினிடையேயும் வினியோகிக்கப்பெற்றுவிட்டால், அந்த நிலையை மிக எளிதாக அடியிற்கண்டவாறு கூறலாம். அணுக் கரு சூடாக்கப்பெறுகின்றது. ஒரு குவியல் மணலினுள் ஒரு துப்பாக்கிக் குண்டு சுடப்பெறும்பொழுது மணல் முழுவதும் இதே மாதிரிதான் சூடாக்கப்பெறுகின்றது. மணல்_குவிய லினுள் உள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலின் அதிகரிப்பு அக்குவியலின் வெப்பநிலை உயர்வுடன் பொருந்துகின்றது என்பதை நாம் நினைவிற்கொண்டால், இந்த இயக்கம் ஒரு நுண்ணிய அமைப்பினச் சூடுபடுத்துவதுடன் ஒப்பாக அமைத் துள்ளது. ஒர் அணுக்கருவினுள், முலக்கூறுகளுக்குப் பதிலாக நியூட்ரான்களையும் புரோட்டான்களையும்பற்றிப் பேசுகின் ருேம்; இயக்க ஆற்றல் அணுக்கருவின் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையுடன் தொடர்பு கொண்டுள்ளது. அணுக்கரு அடையும் வெப்பநிலை: இவ்வாறு ஓர் அணுக்கருவில்ை அடையப்பெறும் வெப்ப நிலை - எடுத்துக்காட்டாக, கிட்டத்தட்ட 8 MeV ஆற்றல் அதனுள் செலுத்தப்பெறுங்கால்-வாயுக்களின் இயக்கக் Qamsirabs (Kinetic theory of gases) offsån Qurlito. Lässt யிரம் மில்லியன் சுழி (Degree) அளவுள்ளதாக உள்ளது: அஃது இவ்வகிலத்திலுள்ள மிக உயர்ந்த வெப்பநிலைகளைவிட கிட்டத்தட்ட ஓராயிரம் மடங்கு அதிகமாக உள்ளது; அது நிலையாகவுள்ள விண்மீன்களின் அகடுகளில் (Interiors) உள்ள வெப்ப நிலையுடன் ஒத்துள்ளது என்றுகூடச் சொல்ல லாம். எனினும், அணுக்கருவில் இந்த உயர்ந்த வெப்பநிலை கள் அந்த ஒர் அணுக்கருவின் மிகச் சிறிய பகுதியை மட்டி லுமே பாதிக்கின்றன.