பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் żÖ 7 இந்த நிலையிலுள்ள அணுக்கருவினை மிக அதிகமான அளவு சூடாக்கப்பெற்ற ஒரு நீர்த்துளியாகக் கற்பனை செய்து கொண்டால், காரண காரிய முறைப்படி நாம் எதிர்பார்க் கும் இன்றியமையாத முடிவு இதுதான்: அஃதாவது, மிக அதிகமான வெப்பநிலையின் காரணமாக, அந்த அணுக்கரு ஆவியாகிவிடும். ஒரு சிறிது நேரம் கழிந்த பிறகு, ஏதாவது ஒரு துகள் அணுக்கருவினின்றும் வெளிவரும்;-பொதுவாக, ஆற்றலியலைப் பொறுத்தவரையில் அந்தத் துகள் வெளி வரு தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; அஃதாவது, அது வெளிவருதலுக்கு மிகக் குறைந்த அளவு ஆற்றலே தேவைப் படுகின்றது. இங்குத் தேவையாகவுள்ள ஆற்றல் உண்மை யான திரவத்தில் ஆவியாகும் வெப்பத்துடன் ஒத்துள்ளது. இந்த ஆற்றலை வெளிவிட்டதன் விளைவாக அந்த அணுக்கரு குளிர்வடைகின்றது. சில சமயம், இரண்டாவது துகளும் வெளிவருதல் கூடும். இல்லாவிட்டால், இன்னெரு துகள் வெளிவருவதற்குப் போதா நிலையிலுள்ள எச்ச ஆற்றல் காமாக்கதிர் வடிவில் - அஃதாவது ஃபோட்டானக-வெளி யேறுகின்றது. ஒருவிதத்தில் இச்செயல் வெண் தழல் (Incandescent) நிலையிலுள்ள ஒரு துளியை ஒத்துள்ளது: இத் துளி அதிக வெப்ப நிலையின் காரணமாகக் கட்புலளுகும் ஒளியையும் வெளிவிடுகின்றது. முடுக்கம் பெற்ற மின் துகள்கள்: அணுக்கருவினைத் தாக்குவதற்குப் பயன்படுத்திய துகள் மின்னூட்டமின்றி இருக்கும்பொழுது மாத்திரம்தான்,அஃதாவது அது ஒரு நியூட்ரானகவோ அல்லது ஃபோட்டா ஞகவோ இருக்கும்பொழுதுதான்.-சற்று முன்னர் விவரித்த செயல் தடையின்றித் தொடர்ந்து நிகழ்தல்கூடும். ஆளுல், தாக்கும் துகள் ஒரு புரோட்டாளுகவோ அல்லது ஒர் ஆல் பாத் துகளாகவோ இருந்தால், அஃது அணுக்கருவின் அருகில் மின் அழுத்த அரணை எதிர்த்துக்கொண்டு வருதல் வேண்டும்; இந்த அரணின் உயரம் தாக்குற்ற அணுக்கருவின் மின்னுரட்ட