பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அணுக்கரு பெளதிகம் G&G3 & 2 Lissuffé8 (Selective absorption) flagpälä spg), இச்செயல் ஒளி உட்கவரப்படுதல் நிகழும்பொழுது உண் டாகும் நாம் நன்கு அறிந்த ஒன்று. இப்பொழுது அலையின் அதிர்வு-எண் நியூட்ரானின் நேர் வேகத்தைக்கொண்ட ஒரு சார்பலன் (Function) ஆகும்; ஆகவே, மிகவும் திட்டமான ஒரு நேர் வேகம் அமைந்துள்ளது: இந்த நேர் வேகத்தின் பொழுது அநு. நாதத்திற்குத் தேவையான கூறுகள் நிறைவு பெறுகின்றன: அந்த அலையும் சிறப்பாக அணுக்கரு வில்ை உட்கவரப்பெறுகின்றது. ஆனால், துகள்கூறில் இதனை மீண்டும் மொழி பெயர்த்துக் கூறினால், அணுக்கருவி குல் நியூட்ரான் சிறையீடு செய்யப்பெறுதலின் ஏற்படு நிலை மிக அதிகமான தொன்ருக உள்ளது. இவ்வாறு நேர்வேகத் தைச் சார்ந்திருப்பது அடிக்கடி அணுக்கருவின் குறுக்கு வெட்டு (Nuclear cross-section) என்ற முறையில் விவரிக்கப் பெறுகின்றது. அணுக்கருக்களைக் கோளங்களாகவும், நியூட் ரான்களைப் புள்ளிகளாகவும் சங்கற்பித்துக்கொண்டு அவற்றி னிடையே எந்தவிதமான விசையும் செயற்படவில்லை என்று கருதுவோம். இதில், கோளங்களின் குறுக்கு வெட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு பெரியனவாக உள்ளனவோ, அவ்வள வுக் கவ்வளவு அணுக்கருவினை நோக்கி நேர்ந்தபடி எய்யப் பெறும் நியூட்ரான்கள் அணுக்கருவினைத் தாக்கும் ஏற்படு திaலயும் அதிகமாக இருக்கும். இந்த மாதிரி ஏற்பாட்டில், வெவ்வேறு நேர் வேகங்களைக்கொண்ட நியூட்ரான்களுக் கேற்றவாறு அணுக்கருக்களும் வெவ்வேறு பருமனுள்ள குறுக்கு வெட்டுக்களைப் பெற்றிருக்கும். குறிப்பிட்ட செளகர்ய மான சூழ்நிலையில், இந்த அணுக்கருக் குறுக்குவெட்டு, அணுக் கருவின் உண்மையான வடிவ கணித குறுக்கு வெட்டுப் பரப்பைவிட 10,000 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். இதல்ை சிறையீடு செய்தலின் ஏற்படுநிலை மிக அதிகமாக இருக்கும் என்பது பெறப்படுகின்றது. இதல்ைதான் இந் நிகழ்ச்சியைக் கண்டறிந்த ஃபெர்மி என்பார் நியூட்ரான் களின் வேகத்தை (நியூட்ரான்கள் - உண்டாக்கப்பெறும் பொழுது அவற்றின் வேகம் அதிகமாக உள்ளது) வெப்ப