பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 21 1 நேர்வேகத்திற்குக் (Thermal velocity) குறைக்கும் பொறி யமைப்பினே (Device) முதன் முதலாகக் கையாண்டார். அவர் நியூட்ரான்களை நீர் அல்லது மெழுகு (பாரஃபின) போன்ற ஹைட்ரஜனைக்கொண்ட ஒருபொருளினூடேபாயும் படி செய்தார். இதற்கு ஹைட்ரஜன் மிகச் சிறந்த பொரு ளாக அமைகின்றது; ஏனெனில், ஒரு புரோட்டானின் பொருண்மை கிட்டத்தட்ட ஒரு நியூட்ரானின்பொருண்மைக் குச் சமமாக உள்ளது. அன்றியும், மீள்விசைத் தாக்குதல் assifier or Qum Liq (Laws of elastic impacts) soft sp வின் விரைவான பரிமாற்றத்திற்குரிய நிலைமைகள் இங்கு மிகவும் செளகர்யமாக அமைந்துள்ளன. அத்தகைய மெது வான நியூட்ரான்கள் ஓர் அணுக்கருவினல் சிறையீடு செய்யப் பெறும்பொழுது, அணுக்கருவின் சூடாக்குதலை உண்டாக்கு வதற்குத் தேவையான அணுக்கரு விசைகளின் கவர்ச்சி வீச்சுக்குள்ளேயே அவை முடுக்கப்பெறுகின்றன; அணுக் கரு குடாக்கப்பெறுதல் குறித்து ஏற்கெனவே ஆராயப் பெற் றுள்ளது. இதற்கு மறுதலையாகவும், ஒரு மின்னூட்டம்பெற்ற துக ளைவிட ஒரு நியூட்ரான் அவ்வாறு சூடாக்கப்பெற்ற அணுக் கருவினின்றும் வெளியேறுதல் மிகவும் எளிதானது. உண்மை யில், மின்னூட்டம்பெற்ற துகள் வெளியில் செல்வதற்கு மின் அழுத்த அரணை ஏறிக் கடந்து செல்லவேண்டிய நிலை’ யுள்ளது; ஆனால், நியூட்ரானுக்கு இத்தகைய அரண் ஒன்றும் இல்லை. மின் அழுத்த அரண் மிக அதிகமாகவுள்ள பளு வான அணுக்களில் ஒரு புரோட்டான் அல்லது ஒர் ஆல் பாத் துகள் வெளிவருதலுடன் ஏற்படும் அணுக்கரு உருமாற் றங்கள் அரியனவாக இருப்பதற்கு இதுவே காரணமாகும். ஆயின், ஓர் அணுக்கரு மிக உயர்ந்த அளவிற்குச் சூடாக் கப்பெறும்பொழுது, ஒரு திரவத் துளி ஆவியாதலைப் போலவே, மிகப் பெரிய எண்ணிக்கையில் மின்னூட்டம் பெற்ற துகள்களும் மின்னூட்டம்பெருத துகள்களும் அதன் உள்ளிருந்து வெளிவருதல் கூடும். ஆய்வகத்தின் ஆய்கருவி