பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 14 அணுக்கரு பெளதிகம் மாக உருவழிதல் ஓர் எல்லையை அடையும்பொழுது அணுக் கரு-இரண்டாக ஒடியும் நிலையிலுள்ள ஓர் இரும்புக் கோலைப் போல்-கிட்டத்தட்ட நடுவில் மிக மெல்லிதாகி, இறுதியில் ஏறக்குறைய இரு சமபாகங்களாக உடைபடுகின்றது. பல நியூட்ரான்கள் வெளிவிடப்பெறுதலால், சிராய்கள் (Spliniers) பறந்து செல்லுகின்றன. பிளவுறும் நிகழ்ச்சி - விளக்கம்: அத்தகைய பிளவுறும் நிகழ்ச்சி சாத்தியப்படக்கூடியது என்பதையும், அது மிகவும் பளுவான அணுக்கருக்களில்தான் ○○○○○ படம்-26: அணுக்கரு பிளவுறுதலை விளக்குவது. நிகழ்கின்றது என்பதையும் புரிந்துகொள்வது எளிது. ஒர் அணுக்கருவின் நிலைப்புடைக்கு உத்திரவாதமாகவுள்ள அணுக்கரு விசைகள் மின்சார விலக்கு விசைகளால் எதிர்க்கப் பெறுகின்றன; இந்த எதிர்ப்பு விசை அணுக்கருவின் பொருண்மைக்கேற்றவாறு அதிகரிக்கின்றது; காரணம், முழுமையாக யோசிக்குமிடத்து, மின்னூட்டமும் பொருண் மைக் கேற்றவாறு அதிகரிக்கின்றது. ஒவ்வொரு துகளிலும் விலக்கு விசை பிணைப்பாற்றலின் குறைவினை உண்டாக்குகின் றது; எனவே, பொருண்மையின் அதிகரிப்பிற்கேற்றவாறு நிலப் புடைமையின் குறைவினையும் உண்டாக்கிவிடுகின்றது. இந்தக் கூறுடன் அணுக்கருவின் நிலைப்புடைமை அதனுடைய அதிர்வில்ை இடையூற்றுக்கு உட்படுத்தப்பெற்ருல் மின்சார விலக்கு விசை தன்னுடைய விளைவினைத் தாராளமாக உணரும்படி செய்துவிட முடிகின்றது. அசைவின் ஒரு குறிப் பிட்ட வீச்சிற்குமேல், தொடங்கின அசைவினை இன்னும்