பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 அணுக்கரு பெளதிகம் முற்றுவிக்கப்பெற்ற முதல் உருமாற்றத்தைக் குறிப்பிடலாம், இவர்கள் 1932-லேயே புரோட்டான்களைப் பயன்படுத்தி இந்த இயக்கத்தை உண்டாக்கினர். 600,000 வோல்ட்டு உயர் அழுத்த ஆய்கருவியொன்றினைக்கொண்டு புரோட் டான்கள் வேகம் வளர்க்கப்பெற்றன. அத்தகைய புரோட் டான் ஒரு லிதிய அணுக்கருவினைத் (Li') தாக்கும் பொழுது அடியிற் குறிப்பிடப்பெறும் இயக்கம் நிகழ் கின்றது: ,Li'–H 1H1 –> ,He4 + ,He* அஃதாவது, இரண்டு ஆல்பாத்துகள்கள், அல்லது ஹீலிய அணுக்கருக்கள் உண்டாகின்றன. படம்-27 (கிர்ச்னெர்.25 எடுத்த ஒளிப் படத்தின்ப்டி) முகில் அறையில் நடைபெறும் இந்தச் செயலினைக் காட்டுகின்றது. புரோட்டான்கள் வேகம் வளர்க்கப்பெறும் மின் இறக்கக் குழலின் (Discharge tube) நுனி கண்ணுக்கும் புலளுகின்றது. அங்கிருந்து அத்துகள்கள் விதிய உலோகத் துண்டினைத் தாக்குகின்றன. அங்கிருந்து புறப்பட்டு எதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு ஆல்பாத் துகள்களின் சுவடுகளை நாம் காணலாம். (கண்ணுக்குப் புலனுகும் மற்ருெரு சுவடு இந்த இயக்கத்தைச் சேர்ந்தது. அன்று). இதே மாதிரியான ஒர் இயக்கம் படம்-28 இல் காட் டப் பெற்றுள்ளது.இங்கு வேகமாக வரும் ஒரு புரோட்டான ஒரு போரன் அணுக்கரு விழுங்கி மூன்று ஹீலிய அணுக்கருக் களாக மாறுகின்றது. அஃதாவது:

Bo + Ho -> He -- He4 + , He4

(இங்கும் ஒர் ஆல்பாத் துகள் கண்ணுக்குப் புலனுகின்றது: அஃது இந்த இயக்கத்தைச் சேர்ந்தது அன்று) 25. stri ở@sarff-Kirchner.