பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 219 பண்டையோர் கண்ட இரசவாதம்-ஓரளவு சாத்தியம்: இறுதியாக, இந்தப் பிரச்சினைகளின் பண்டைய வரலாற் றினேயொட்டி, பண்டைய இரசவாதிகளின் கனவாக இருந்து வந்த பாதரசத்தைப் பொன்னக்கும் விந்தையை நாம் செய்ய முடியுமா, எந்த அளவு இது சாத்தியப்படக்கூடியது என்று வினவலாம். இந்த விளுவிற்கு விடையிறுக்க வேண்டுமாயின் அட்டவணை-4ஐப் பார்த்தால் போதுமானது. பாதரசமும் பொன்னும் மிக அருகிலுள்ள அயலவர்கள் என்பதை அது காட்டுகின்றது; ஒன்றனப் பிறிதொன்ருகஉருமாற்றுவதற்கு ஒரே ஒரு படிதான் வேண்டப்படுவது. அஃதாவது, மிகவும் தற்செயலாக, கடந்த நூற்ருண்டுகளின் இரசவாதிகள் பாத ரசத்தைப் பொன்னுக்க முயன்றதில் சரியான பாதையில் செல்ல நேரிட்டது. நம்முடைய இன்றைய அறிவின்படி, பாதரசம் 196இலிருந்து 204 வரையுள்ள பொருண்மை.எண் களையுடைய 7 நிலைத்த ஐசோடோப்புக்களைக் கொண் டுள்ளது; ஆளுல், பொன் பொருண்மை-எண் 197ஐக் கொண்டு ஒரே ஒரு ஐசோடோப்பினையே பெற்றுள்ளது; நமக்குத் தெரிந்த பாதரச ஐசோடோப்புக்களில் இந்தப் பொருண்மை-எண் காணப்பெறவில்லை. பொருண்மைஎண் 196ஐக் கொண்ட பாதரச ஐசோடோப்பு நியூட்ரான் களால் கதிர்வீசலுக்கு உட்படுத்தப்பெற்ருல், ஒரு நியூட் ரான் ஒரு பாதரச அணுக்கருவில் சேர்ந்து, நமக்குத் தெரியா துள்ள பொருண்மை-எண் 197ஐக் கொண்ட அணுக்கருவிளை விளைவித்தல் கூடும். இந்த அணுக்கரு நிலையற்றதாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், ஏற்கெனவே அஃது காணப் பெற்றிருக்கும். ஆகவே, அது பாசிட்ரானே வெளிவிட்டு (அல்லது K.கதிர்வீசலிளுல்), அதே பொருண்மை.எண்ணைக் கொண்ட நிலையான பொன்அணுக்கருவாக மாறும். எனவே, அடியிற்காணும் இரண்டு இயக்கங்கள் இதே வரிசைப்படி நிகழும்: (1) „Hgo 十 „no -مجھ س „Hgo" Au197 -4- ne0,, ـجـ Hg197.. (2)