பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 அணுக்கரு பெளதிகம் பாதரச அணுக்கரு (Hg) பொன் அணுக்கருவாக (,Au') மாறியுள்ளது. எனவே, அடிப்படையில், அணுக்கரு பெளதிக அறிஞ ருக்குப் பாதரசத்திலிருந்து பொன்னினை உண்டாக்குவதில் எவ்வித சிரமமும் இருந்திராது.எனினும், இந்த உருமாற்றம் இதுகாறும் நடைமுறையில் பதிவு செய்யப்பெறவில்லை. இந்த உருமாற்றத்தை மேற்கொள்ளாததன் காரணம்: இந்த உருமாற்றம் இன்னும் ஏன் மேற்கொள்ளப்பெற வில்லை என்று நாம் இறும்பூது அடையலாம் ஆளுல்,இதஞல் அடையும் இலாபம் மிகச்சிறிதாக இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். அவப்பேற்றின் காரணமாக, பாதரச ஐசோடோப்பு (Hg) மிகவும் அரிதாகக் கிடைக்கும் பொருளாகும்; இயற்கையில் கிடைக்கும் பாதரச ஐசோ டோப்புக்களின் கலவையில் அது 0.1 சதவீததிற்கு மேல் இல்லை. பாதரசம் நியூட்ரான்களின் தாக்குதலுக்கு உட் படுத்தப்பெற்ருல், ஆயிரம் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட் ரான்தான் பாதரசஅணுக்கருக்கள் ஒன்றனுள் சேர நேரிடும். மிகவும் அரிதாகவுள்ள பாதரச ஐசோடோப்பிலிருந்து நாம் பொன்னை உண்டாக்க முடியாது: ஆளுல், வேறு ஒரு பாதரச ஜசோடோப்பினையோ தாலியத்தையோ உண்டாக்கலாம். ஆயினும், விரைவான நியூட்ரான்களைக்கொண்டு தாக்குதலை விளைவித்து நம்முடைய குறிக்கோளை எளிதில் அடையலாம் என்பது நாம் எண்ணிப் பார்க்கக் கூடியாகவுள்ளது. .He198 என்ற பாதரசத் ஐசோடோப்பு Hg" என்ற ஐசோடோப்பினைவிட 100 மடங்கு அதிகமாகக் கிடைக் கின்றது. பொருண்மை-எண் 198ஐக் கொண்ட இந்தப் பாதரச அணுக்கருவை நியூட்ரான்களின் தாக்குதலால் சேர்ந்தாற்போல் இரண்டு நியூட்ரான்களை வெளிவிடும் வரை மிக உயர்ந்த சுழி அளவுக்குச் சூடாக்குவதில் நாம் வெற்றி யடைந்தால், நமக்குப் பொன் அணுக்கரு (,Au') கிடைத்து