பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் (1) உற்றறிந்து கண்டறியும் முறைகள் நுட்பமான ஆய்கருவிகளின் இன்றியமையாமை: 'இதற்கு முன்னர் நடைபெற்ற ஆராய்ச்சிச்சொற்பொழிவு களில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளே உண்டாக்கவும் அவற்றை அணுகி நோக்கவும் அணுக்கரு பெளதிக அறிஞருக்குக் கிட்டி யுள்ள ஒரு சில கருவிசளைப்பற்றியும் அவர் அறிந்துள்ள முறை களைப்பற்றியும் இந்த நூலின் அடியிற்கண்ட பிரிவுகள் விளக்கு கின்றன. இந்த வினைமுறைகளுக்கு ஏராளமான அளவுகளில் ஆற்றல் தேவைப்படுகின்றது; இந்த ஆற்றலை நல்குவதற்குத் தொழில்துறை அறிவியல் கண்டறிந்துள்ள மிக ஆற்றல் வாய்ந்த கருவிகளைப் பயன்படுத்தவேண்டும். எனினும், இந்த அளவற்ற ஆற்றல் தேக்கங்களேக்கொண்டு அடைந்த முடிவு கள் மிகச் சிறியனவாவே உள்ளன. ஆகவே, இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு மிகவும் நுட்பமான கருவிகள் இருக்கவேண் டியது மிகவும் இன்றியமையாதது; காரணம், ஆராயப்பெற வேண்டிய நிகழச்சிகள் ஒரு தனிப்பட்ட அணுவில், அல்லது மிகச் சில அணுக்களில், நடைபெறுகின்றன; அஃதாவது, சாதாரன கருத்துப்படி, அவை மனத்தாலும் எண்ணிப் பார்க்கமுடியாத மிகச் சிறிய அமைப்புக்களில் நடைபெறு கின்றன. துருவியறியும் கருவிகளிலும் வேறு ஆய்கருவிகளிலும் இருந்து நாம் நமது ஆராய்ச்சியைத் தொடங்குவோம். மிகப்