பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 அணுக்கரு பெளதிகம் மீண்டும் காற்று மூலக்கூறுகளினின்றும் எலக்ட்ரான்களைக் கிழித்தெறிகின்றன. இந்த எலக்ட்ரான்கள் மேலும் இதே செயலைப் புரிகின்றன; இவ்வாறு விடுவிக்கப்பெறும் எலக்ட் ரான்களின் எண்ணிக்கை ஒரு மலையிலிருந்து விழும் சறுக்குப் பனிப்பாறைபோல் அதிகரிக்கின்றது; புலம் வலிவற்ற நிலையி லுள்ள பொழுதுதான் எண்ணிக்கை அதிகரிப்பது நிற்கின் றது ஆளுல், இந்தச் செயல் நேரிடும்பொழுது, ஓர் ஒற்றைத் துகள் அல்லது ஃபோட்டானின் விளைவாக ஏராளமான எண் ணிைக்கை அளவில் துகள் உண்டாக்கப்பெறுகின்றன; அவை நாம் அறிந்த முறையிலேயே உற்றறிந்து காணப்பெறு கின்றன. மின் அழுத்தம் மிக அதிகமாக இல்லாதபொழுது, சில கட்டுப்பாடுகளின்கீழ்எலக்ட்ரான்கள் எண்ணிக்கையில் பெருக் கமடைதல் அதே காரணக் கூறினல் அதிகரிக்கின்றது.ஆகவே நாம் எண்-கருவியின் விகிதப்பொருத்த மண்டலம்(Proportional region) என்றும் எண்-கருவியின் விகிதப்பொருத்த எண்ணிக்கை (Proportional count) என்றும் பேசுகின்ருேம். சற்று முன்னர் குறிப்பிட்ட காரணக்கூறு 1000 அல்லது அதற்கு மேலும் உள்ள அளவாக இருக்கலாம். ஆனால், எண்-கருவியின் மின் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அதிகப்படும்பொழுது, நம் விகிதப் பொருத்த மண்டலத் திற்கு அப்பால் சென்று விடுகின்ருேம். அந்நிலையில், அத்துகளினல் விடுவிக்கப்பெறும் எலக்ட்ரான்கள் ஒர் ஒளிர்தலுடன்கூடிய மின் Øspää, ään jä (Discharge) தொடங்குகின்றது; அதன் விளைவாக அது பத்து மில்லியன் மடங்கு அல்லது நூறு மில்லியன் மடங்கு அதிகரிக்கின்றது. அந்நிலையில் மின் இறக்கம் அடைதல் நிறுத்தப்பெறச் செய்து மீண்டும் அந்த எண்-கருவி ஒரு புதிய துகளிற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்தப் பிரிநிலை மண்டலத்தில் (Resolving region) பெருக்கமடைதல் முதல் நிலையில் விடுவிக்கப் பெற்ற எலக்ட்ரான்களின் எண்ணிக்கையுடன் தொடர்பு கோள்ளாமல் உள்ளது. ஒர் ஒளிர்வடைதலுடன் கூடிய