பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 அணுக்கரு பெளதிகம் பெற்றுள்ளது; வெளி மூடி பூமியைவிட 1000-1200 வோல்ட்டு மின்-அழுத்த வேற்றுமையில் உள்ளது. முள்ளுடன் கூடிய எண்-கருவியிலுள்ள நிலைமையைப் போலவே இங்குள்ள நிலைமையும் உள்ளது. குறைந்த மின் அழுத்தத்தில் விகிதச் சமப் பெருக்கம் 1000 மடங்கு ஏற்படு கின்றது. மின் அழுத்தம் அதிகமாக இருக்கும்பொழுது, ஒளிரும் தன்மையுள்ள மின் இறக்கம் நிகழ்கின்றது; இப் பொழுது பிரிவு மண்டலத்தில் இந்தப் பொறியமைப்பு செயற்பட்டுக் கொண்டுள்ளது. ஒளிருந் தன்மையுள்ள மின் இறக்கம் அமைந்த கணத்திலிருந்து மின் தங்கியுடன் (Condenser) பொருத்தப்பெற்றிருக்கும் கம்பி மின்தங்கி யைப் போலவே, உறைப்பான மின்னுரிட்டத்தைப் பெறுகின் றது; மிக உயர்ந்த தடையின் காரணமாக மின்னூட்டம் பூமியினுள் பாய்வதற்கு முன்னர் ஒரு கணிசமான கால அளவு கடந்து செல்ல வேண்டும். ஆகவே, இந்தக் காலத் தின்பொழுது கம்பியும் கம்பியுடன் பொருத்தப்பெற்றிருக் கும் மின் தங்கியும் (C) ஒரு குறிப்பிட்ட மின் அழுத்தத்தி லுள்ளன: சாதாரணமாக ஒலிபரப்பும் துறை-துணுக்கத்தில் (Technique) கையாளப்பெறும் முறைகளைக் கையாண்டு இந்த மின் அழுத்தம் பெருக்கப்பெறுகின்றது. பெரும்பான் மையான அளவீடுகளில் வழக்கமாகச் செய்யப்பெறுவதைப் போலவே, தொலைபேசிவிலுள்ள (Telephone) கணக்கிடும் பொறியமைப்பைப் போன்ற பொறியமைப்பு ஒன்று இத் துடன் சேர்க்கப்பெறுதல் கூடும்; அல்லது மின் அழுத்தம் ஒர் ஒலிபெருக்கிக்குச் செலுத்தப்பெறுதலும் கூடும்; இவ் வாறு நாம் கணக்கிடும் குழல் வழியாகச் செல்லும் ஒவ் வொரு துகளினையும் எண்ணிப் பதிவு செய்து கொள்ள 6b f} ᎥᏝ . பீட்டாக் கதிர்வீசலாலும் காமாக் கதிர்வீசலாலும் உண் டாகும் அயனிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவுள்ளது. ஆகவே, பெரியதொரு பெருக்கம் தேவைப்படுகின்றது; அப் பெருக்கம் பிரிநிலை மண்டலத்தில் இயற்றப் பெறுவது