பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 229 வழக்கம். மேலும், பீட்டாத் துகள்கள் மிகவும் ஊடுரு விச் செல்லக் கூடாத நிலையிலிருப்பதால், பீட்டாத் துகள்களைக் கணக்கிடுவதற்கு மெல்லிய சுவர்களைக் கொண்ட குழல்கள் பயன்படுத்தப்பெறுகின்றன. அதற்கு மாருக, காமாக்கதிர் ஃபோட்டான்களைக் கணக்கிடும் பொழுது கூடியவரை பிறவகைத் துகள்கள் சேராதிருக்கும் பொருட்டுத் தடித்த சுவர்களைக் கொண்ட குழல்களே பயன் படுத்தப்பெறுகின்றன. அதிகமான எலக்ட்ரான்களை இயற் றும் ஆல்பாக் கதிர்களைக் கணக்கிடுவதற்கு மேற்கொள்ளும் பொழுது பெரியதொரு பெருக்கம் ஏற்படுவதைத் தவிர்த்து விடலாம்; அதை விகித சம மண்டலத்தில் இயற்றுவது சாத் தியப்படக் கூடியது. இந்த முறையில் ஒரு நன்மையும் உண்டு: கணக்கிடும் பொறியமைப்பு சரியான முறையில் பொருத்தப்பெற்று விட்டால், அது பிறவகைக் கதிர்வீச லுடன் இயக்கம் புரிவதில்லை. பிறவகைக் கதிர் வீசல்கள் வலுவற்ற மின் அழுத்தத் துடிப்புக்களேயே (Potential imptises) உண்டாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட அலைநீளத் திற்கு மேற்பட்டுள்ள துடிப்புக்களைவிட மட்டிலும் கடத்தும் தைராட்ரான் எனப்படும் ஒரு பிரத்தியேகமான பெருக்கி, வலுவற்ற துடிப்புக்களைத் தவிர்த்து விடுகின்றது. இதல்ை ஆல்பாக் கதிர்வீசலினுல் மட்டிலும் இயற்றப்பெறும் துடிப் புக்கள் மட்டிலும் கணக்கிடப்பெறுகின்றன. இது மிகவும் முக்கியமானது; ஏனெனில், ஆராய்ச்சிக்கு மேற்கொள்ளப் பெற்றுள்ள கதிர் வீசலைத் தவிர, ஊடுருவிச் செல்லக்கூடிய பிறவகைக் கதிர்வீசல்கள் யாவும் இடப்பரப்பில் அலேந்து கொண்டுதா னிருக்கும். முதலாவதாக, அண்டக் கதிர்வீச லின் காரணமாக எம்மருங்கும்-எண்-கருவியிலும்கூடஎலக்ட்ரான்கள் இயற்றப்பெறுகின்றன. நாம் அறிந்த எந்த முறையிலும் இந்த அண்டக் கதிர்வீசலைத் தடுக்க முடி யாது. இரண்டாவதாக, எந்தப்பொருளும் கதிரியக்க மாசு களின்றி இருத்தல் முடியாது. எண்-கருவி செய்யப்பெற் றுள்ள பொருளும் சில சமயம் துடிப்புக்களே வெளிவிடத் தான் செய்கின்றது. இந்தக் குறைந்த விளைவுகள் தவிர்க்க