பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 233 விளைவினைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதனை நிறை வேற்றுவதற்குப் போரான் எண் - கருவிதான் மிக எளிய சாதனமாக அமைகின்றது. இந்த எண் - கருவிச் சுவரின் உட்புறம் போரான் அல்லது போரானின் கூட்டுப்பொரு ளால் பூசப்பெற்றுள்ளது; இந்தக்குழல் விகித சம மண்டலத் தில் பயன்படுத்தப்பெறுகின்றது. அதஞல், அஃது ஆல்பாத் துகள்களை மட்டிலுமே கணக்கிடுகின்றது நியூட்ரான்கள் போரான் படலத்தினைத் தாக்கும்பொழுது, அவை அடியிற் காணும் அணுக்கரு இயக்கத்தினை உண்டாக்குகின்றது: Heی --Li جسم س-Bی இந்த இயக்கம் விரைவில் ஹீலிய அணுக்கருகளை, அஃதா வது செயற்கை ஆல்பாத் துகள்களை, உண்டாக்குகின்றது: இதில் ஒரு நியூட்ரானுக்கு ஒர் ஆல்பாத்துகள் வீதம் உண்டா கின்றது. ஒர் அணுக்கரு இயக்கத்தைத் தூண்டும் ஒவ்வொரு நியூட்ரானும் எண் - கருவியை ஓர் துடிப்புடன் செயற் படச் செய்கின்றது: இந்த இயக்கத்தில் விதிய அணுக்கரு வும் பங்குகொள்ளுகின்றது. எண் - கருவியைத் தாக்கும் ஒவ் வொரு நியூட்ரானும் எந்த முறையிலும் ஒர் அணுக்கரு இயக்கத்தை நிகத்துவதில்லை; அவற்றுள் பெரும்பாலானவை எந்தவித விளைவினையும் உண்டாக்காது குழலைக் கடந்து செல்லுகின்றது. எனினும், எண் - கருவி நியூட்ரான்களின் எண்ணுக்கு விகித சமமாகவுள்ள எண்ணின் அளவு நியூட் ரான்களைப் பதிவு செய்கின்றது. விகிதசம மாரு த காரணி இன்னும் தெரிந்தபாடில்லே. உளவு காட்டும் வழி - துலக்கி முறை: அடிக்கடி கையாளப்பெறும் மற்ருெரு முறை, நியூட் ரான்கள் இரும்பினே ஐயப்படக்கூடிய இடத்தில் ஓர் உளவு காட்டும் வழி துலக்கியை (Tracer) வைப்பது ஆகும். நியூட்ரா ஞல் தூண்டப்பெறும் அணுக்கரு இயக்கத்தால் செயற்கை