பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 235 பொருளின் ஊடே நியூட்ரான்களைக் கடந்து செல்லு மாறு செய்து அவற்றின் வேகத்தைக் குறைக்கலாம் என் பது ஏற்கெனவே நமக்குத் தெரியும். எண்.கருவியைப் பாரஃபின் மெழுகால் சூழப்பெறச் செய்தால், உட்துடிப்புக் கள் பெரிய அளவில் பெருக்கப்படும்; அதனுலுண்டாகும் வெடிப்பொலியும் நம் காதிற்கு நன்கு புலனுகும். இவ்வாறு, பாரஃபின் மெழுகினப் பயன்படுத்தினுல் அது விளைவினைக் குறைத்துவிடும் என்று பொதுவாக நாம் கொண்டிருந்த கருத்திற்கு மாருக, விளைவினை அதிக வன்மையாக்கு வதையே நாம் காண்கின்றுேம் நியூட்ரான்களின் வேகத் தைத் தணித்து அணுக்கரு மாற்றங்களின் வெனிப்பாட்டினை அதிகரிக்கச் செய்யும் இந்த முறைதான் அணுக்கரு பெளதி கத்தில் அடிக்கடி மேற்கொள்ளப்பெறுகின்றது. (11) அணுக்கரு உரு மாற்றத்தை உண்டாக்கும் செயல் முறைகள் ஆற்றல் மிக்க துகள்கள்: அணுக்கரு உருமாற்றத்தை விளைவிப்பதற்கு ஆற்றல் அதிகமாகக்கொண்ட துகள்களே தேவை என்பது ஒரு பொது விதியாகும். நியூட்ரான்களால் உருமாற்றம் தூண் டப்பெறும்பொழுதுமட்டிலுந்தான் தாக்கும் துகள் கொள் டுள்ள ஆற்றலின் அளவு எவ்வளவுக்குச் சாத்தியப்படுமோ அவ்வளவுக்கு அடிக்கடிக் குறைக்கப்பெறுகின்றது. ஆளுல், தொடக்கத்தில் நியூட்ரான்கள்,விரைவாகச் செல்லும் துகள் களால் தூண்டப்பெறும் அணுக்கரு இயக்கத்தால் உண்டாக் கப் பெறுதல் வேண்டும்; ஆல்பாத் துகள்களால் பெரிலியம் தாக்குறுதல் இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். துகள்களைத்தரும் இயற்கை மூலங்கள்: இயற்கையே நமக்கு ஆற்றல் மிக அதிகமாகக்கொண்ட துகளை மிகச் செளகர்யமான மூலமாக அளிக்கின்றது; அவை