பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 241 கப்பெற்றுள்ள இட வகையளவுகளினல் சில வரையறைகள் (Limitations) சுமத்தப்பெறுகின்றன; ஏனெனில், ஒரு குறிப் பிட்ட மின் அழுத்தத்தை அடைந்ததும், (இந்த மின் அழுத் தத்தின் அளவு இந்த இடவகையளவுகளையும் கடத்தியின் வகையளவுகளையும் பொறுத்தது), ஒரு பொறி சுவர்களின் குறுக்கே தாண்டிக் குதித்துக் கடத்தியில் மின் இறக்கத்தை உண்டாக்குகின்றது. 1939-இல் 2,000,000வோல்ட்டு களுக்கு மேல் அடையக்கூடிய செயற்படும் மின்னக்கி இருந்த தில்லை. படம்-36, இத்தகைய மிகப் பெரிய அமைப்பினைக் காட்டுகின்றது; பல ஆண்டுகட்கு முன்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இஃது கட்டட அமைப்பு நிலையில் இருந்தது. அது 5,000,000வோல்ட்டுகளை உற்பத்தி செய்வதற்காகவே அமைக்கப்பெற்றது. ஆகவே, அஃது ஒரு மிகப்பெரிய இடத் தில்-ஒரு பழைய ஆகாயக் கப்பல் வைக்கும் லாயத்தில்அமைக்கப்பெற்றது. மின் இறக்கக் குழலுக்கு இரு மடங்கு மின் அழுத்தத்தை உண்டாக்குவதற்காக அதில் இரண்டு கடத்திகள் உள்ளன; அவை எதிரான நிலையிலுள்ள மின் னுாட்டங்களால் மின்னேற்றம் பெறச் செய்யப்படுகின்றன. லாரென்ஸ் சைக்ளோட்ரான்: விரைவாகச் செல்லும் துகள்களை உண்டாக்குவதில் இது காறும் கண்டறியப்பெற்றுள்ள துணைக்கருவிகளில் மிகத் திறனுடையது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த லாரென்ஸ்: என்பார் கண்டறிந்த சைக்ளோட்ரான் (Cyclotron) என்பது. இக்கருவி மிகக் கவர்ச்சியான விதியின் அடிப்படையில் அமைக்கப்பெற்றுள்ளது; அஃதாவது, ஒரே அளவுள்ள. ஆளுல் மிக உயர்ந்த அளவிலாத, மின் அழுத்தத்தினுல் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பெறும் முடுக்கம்தான் அந்த விதியாகும்; இக்கருவி பெற்றுள்ள பல நிறைகளில் 9. Gurrograin giv–Lawrence. அ-16