பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 24.5 1 மில்லி ஆம்பியர் மின்னேட்டம், கிட்டத்தட்ட 1 கிலோ வாட் (சரியாகச் சொன்னல் 900 வாட்டுகள்) மின்னற்றலைக் குறிக்கின்றது. ஒவ்வொரு துகளும் 1 6 x 10- " கூலாங்கள் அளவுள்ள மின்சாரத்தைக் கொண்டிருப்பதால், இந்த மின் ைேட்டம் கிட்டத்தட்ட விடிையொன்றுக்கு 6 x 1.0" துகள் களைக் கொண்டுள்ளது என்று கணக்கிடுவது எளிது. இத்தகைய சைக்ளோட்ரான் ஒன்றன் வெளித்தோற்றத் தைப் படம்-38 காட்டுகின்றது. காந்தத்தின் சுற்றுக்கள் கண்ணுக்குப் புலளுகின்றன; துருவத்துண்டுகளுக்கிடையில் டீ-க்கள் உள்ளன; அத்த டீ-க்களில் துகள்கள் தம்முடைய முடுக்கத்தைத் தொடங்குகின்றன. சைக்ளோட்ரானிலிருந்து வெளிவரும் கற்றையும் ஒளிப்படத்தில் கண்ணுக்குப் புலை கின்றது. அமெரிக்காவில் அமைக்கப்பெற்ற ஒரு மிகப் பெரிய சைக்ளோட்ரான்: அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏற்கெனவே எண்ணற்ற சைக்ளோட்ரான்கள் செயற்படுகின்றன. ஐரோப்பாவிலும் பல சைக்ளோட்ரான்கள் அமைக்கப்பெற்றுள்ளன. 1944. லிருந்து ஜெர்மெனியும் ஹெய்டெல்பெர்க்"கிலுள்ள கெய்சர் வில்ஹெல்ம் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு சைக்ளோட்ரானைப் பெற்றுள்ளது: இந்தச் சைக்ளோட்ரான் முக்கியமாக மருத் துவித்திற்கென்றே அமைக்கப்பெற்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சைக்ளோட்ரானுக்காகச் செலவிடப்பெற்ற பணத் தின் அளவுகொண்டு அஃது உலகில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை விளக்கிக் காட்டலாம்; அங்குத்தான் 1940-இல் ஒரு மாபெரும் சைக்ளோட்ரானின் உத்தேச அமைப்பு முற்றுப்பெற்றது; அதன் பருமன் ஒரு போர்க் கப்பலைப்போல் காட்சியளித்ததேயன்றி ஒர் அறிவியல் கருவி போல் தோற்றம் அளிக்கவில்லை. அதன் துருவத் துண்டுகள் 10. Qsupulou–diousfä—Heidelberg,