பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多46 அணுக்கரு பெளதிகம் 4.7 மீட்டர் குறுக்களவுள்ளது; அதன் காந்தம் 17.8 மீட்டர் நீளமுள்ளது (படம்.39). அதன் அடிப்படைத்தளம் 1,200 டன் கப்பியைக் (Concrete) கொண்டுள்ளது; காந்தத்தில் 3,700 டன் இரும்பும், 300 டன் தாமிரமும் அடங்கியுள்ளன: அக்காந்தம் 102 செ.மீ அகலமும் 6 மி.மீ கனமும் உள்ள ஒரு துண்டாகச் சுற்றப்பெற்றுள்ளது. காந்தத்தின் சட்டம் ஒவ் வொன்றும் 5.5 மி.மீ கனமுள்ள 86 எஃகுத் தட்டுக்களால் ஆக்கப்பெற்றுள்ளது. காந்தப் புலத்தின் உறைப்பு 10,000 ஒயர்ஸ்டெட்டுகள்; மாறு மின்புலத்தின் அதிர்வு.எண் 39 மீட்டருள்ள அலே நீளத்துடன் ஒத்துள்ளது. போருக்குப் பிறகு லாரென்ஸ் என்பார் இதன் அமைப்பை முற்றுப்பெறச் செய்தார்; ட்யூடெரான்களை 100 MeV வரையிலும், ஆல் பாத்துகள்களை 200 MeV வரையிலும் முடுக்குவதற்கு அக் கருவி அவருக்குத் துணையாக இருந்தது. சுருங்கக்கூறின், சைக்ளோட்ரான் மிகவும் விலையுயர்ந்த ஒரு துணைக்கருவியாகும்; அது மிகச்சிக்கலான அமைப்பினை கொண்டதுவுமாகும். எனினும், அஃது இன்னும் அதே செய லுககாக மிகவும் பயனுள்ள முறையில் மேற்கொள்ளப்பெறும் அணுக்கரு பெளதிக ஆராய்ச்சிக் கருவியாகத் திகழ்கின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வேறு எந்த முறைகளாலும் சாத்தியப்படாத பல அணுக்கரு இயக்கங்களை இக்கருவி முற்றுப்பெறச் செய்துள்ளது. .