பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப் பிரயோகங்கள் (1) பயனுள்ள செயல்களில் அணுவாற்றலைப் பயன்படுத்துதல் வேதியியிலின் ஒப்புடைமை அணுக் கருவினைகளை விளக்கப் பயன்படுதல்: அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப் பிரயோகங்களை ஆராயுங்கால்,வேதியியலிலுள்ள ஒப்புடைமைகளைக்கொண்டு தொடங்கில்ை பெரிதும் துணையாக இருக்கும். வேதியியல் என்பது, பல்வேறு தனிமங்கள் ஒன்று சேர்ந்து மிகச் சிக்க லான பொருள்கள் உண்டாவதைக் கூறுவது; அஃதாவது" வேதியியல் கூட்டுப்பொருள்கள் என்பவை உண்டாகும் முறைகளைக் கூறும் துறையாகும் அது; அன்றியும், அந்தக் கூட்டுப் பொருள்களினின்றும் தனிமங்களைப் பிரித்தெடுத் தலையும் அஃது எடுத்துரைக்கும். ஆனல் அணுக்கரு பெளதிகம் என்பது, ஒரு தனிமம் பிறிதொரு தனிம மாக உருமாற்றம் அடைதலே எடுத்தியம்பும் ஒரு துறை யாகும். வேதியியற்செயல்கள் அடிப்படையில் வேற்றுமை யுள்ள இரண்டு பயன்களை விளைவிக்கின்றன: முதலாவது, அவை குறைந்த மதிப்புடைய பொருள்களை உயர்ந்த மதிப் புடைய பொருள்களாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப் பெறக்கூடும். கரியும் ஹைட்ரஜனும் சேர்ந்து பென்சால்' என்ற பொருள் உண்டாதலை இதற்கு எடுத்துக்காட் டாகக் கொள்ளலாம். இரண்டாவது, வேதியியல் மாற்றம் ஆற்றலைப் பெறுவதற்குப் பயன்படுத்தப் பெறக்கூடும்.