பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48 அணுக்கரு பெளதிகம் நிலக்கரி எரிதலால் கரியமிலவாயு உண்டாகி வெப்பத் தைத் தருதல் இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். இந்த இரண்டு பிரயோகங்களும் ஒன்றைச் சாராது பிறிதொன்று தனித்த நிலையில் இல்லை என்பது வெளிப்படை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதெல்லாம் பெரும்பாலும் அப் பொருளை ஓர் ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவதற்காகவே என்பது அடிக்கடி நாம் காணும் நிகழ்ச்சி. பென்சாலின் உற்பத்தியையே இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகக் கொள்ள லாம். இந்த நிலை அணுக்கருச் செயல்களுக்கும் பொருந் தும் என்று கூறலாம். முதலாவதாக, இச்செயல்கள் குறைந்த மதிப்புடைய பொருளிலிருந்து அதிக மதிப்புடைய பொருளை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்பெறலாம்; இரண்டாவ தாக, ஆற்றலை உற்பத்தி செய்வதில் அவை சாதனங்களாக வும் பயன்படுத்தப்பெறக் கூடும். ஓர் எடுத்துக்காட்டு: அணுக்கரு செயல்களின்மூலம் கிடைக்கும் ஆற்றல் அளவின் தரத்தைப்பற்றிய ஒரளவு விளக்கமான கருத்தினைப் பெறுவதற்கு வேதியியலிலுள்ள மற்ருேர் ஒப்புடைமையைப் பயன்படுத்திக் கொள்வோம். கரி, ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரிந்து கரிமிலவாயுவை உண்டாக்குவதை ஒரு சமன்பாட் டின்மூலம் இவ்வாறு எழுதி விளக்கலாம்: C+8,-Co,--96 கிலோ கலோரிகள். இந்தச் சமன்பாடு' மேற்கூறப்பெற்ற செயலில் வெளிப் படும் ஆற்றலேயும் காட்டுகின்றது. இந்த வாய்பாடு 1 மோல், 1 கிராம்-அணு என்ற அலகுகளை உணர்த்துகின்றது: அஃதா வது, 1 கிராம்-அணு கரி (12 கிராம் கரி) 1 மோல் வாயுநிலையி Гт Гс - Gā. O, - ஆ க் ஸி ஜ ன்: CO, - கரியமிலவாயு. மாற்றம் போகும் வழியை அம்புக்குறி உணர்த்துகின்றது.