பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 251 ஆற்றலைப்போல் அணுக்கரு எரிதலால் ஒரு மில்லியன் மடங்கு ஆற்றலே விடுவிக்கின்றது. இயற்கையில், ஒர் ஒழுங்கில், சிறிய அளவில் அணுக்கரு இயக்கங்கள் நிகழ்கின்றன. அவை யாவும் அண்டக்கதிர் வீசலிலுைம் கதிரியக்கப் பொருள்களின் கதிர்வீசலாலும் நடைபெறுகின்றன. இந்த இயற்கை நிகழ்ச்சிகளால் விடுவிக் கப் பெறும் ஆற்றல் மிகச் சிறிய அளவில் இருப்பதாலும் அது மிகச் சிதறிய நிலையில் இருப்பதாலும் அதனை நாம் காண் பதே இல்லை. இயற்கையில் அணுக்கரு இயக்கங்களின் பங்கு: எனினும், அணுக்கரு இயக்கங்களால் விடுவிக்கப்பெறும் ஆற்றல் இயற்கையில் எவ்வித விளைவினையும் உண்டாக்க வில்லை என்று உரிமை கொள்வது அவ்வளவு சரியல்ல. இதற்கு நேர்மாருக, நீண்ட காலப்போக்கில் இத்தகைய செயல்களினல்தான் நாம் இப்புவியில் முற்றிலும் நிலைத்து வாழ்கின்ருேம் என்று உரிமையுடன் பேசுவதற்குக் காரணம் உள்ளது. ஏனென்ருல் முதலாவது, இப்புவியின் மேற்பரப்பி லுள்ள வெப்ப நிலையையும் தட்ப வெப்பநிலையையும் அறுதி யிடுவதில் கதிரியக்கம் மிக முக்கிய பங்கு கொள்கின்றது; இரண்டாவது, கதிரவனிடம் இத்தகைய இயக்கங்கள் நடை பெறுவதனல்தான் அது பிரகாசித்து ஏராளமான ஆற்றலைத் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கின்றது; அதனுல்தான் நம் பூமண்டலத்தில் உயிர்வாழ்க்கையும் நடைபெற்று வருகின் நிறது. விண்மீன்களின் அகட்டில் அணுக்கரு இயக்கங்கள்: விண்மீன்களின் அகட்டில் அணுக்கரு இயக்கங்கள் பேரளவில் நடைபெற்றுக்கொண்டுள்ளன. இந்த அணுக்கரு இயக்கங்களால் உண்டாகும் ஆற்றலைத்தான் விண்மீன்கள்நம்முடைய கதிரவன் உட்பட-வெட்டவெளியில் வீசிக் கொண்டிருக்கின்றன என்பதை இன்று நாம் அறிவோம்.