பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப். 25.3 இந்தக் கோவைச் சமன்பாடுகளில் புரோட்டான்களால் தூண்டப்பெற்ற இயக்கங்களும் பாசிட்ரான்களால் விடுவிக் கப்பெற்ற உரு மாற்றங்களும் (Transmutations) அடங்கி யுள்ளன. இவற்றில் தொடக்கத்திலிருந்த பொருள்கள் பொருண்மை-எண் 12ஐக் கொண்ட கரியும், ஹைட்ரஜனும் ஆகும். விண்மீன்களில் ஏராளமான ஹைட்ரஜன் அடங்கி யுள்ளது என்பதும், அவற்றில் கரியும் சிறிய அளவுகளில் உள்ளது என்பதும் நாம் அறிந்த செய்திகளே. ஏற்கெனவே ஹைட்ரஜன் புரோட்டான்களாக உள்ளது; விண்மீன்களின் அகட்டிலுள்ள உயர்ந்த வெப்ப நிலைகளின் காரணமாக (10.20 மில்லியன் சென்டிகிரேட் சுழியுள்ள (Degree) சூடு) அடைந்த நேர்வேகத்தால், எல்லா ஹைட்ரஜன் அணுக் களும் தம்மிடமிருந்த கோள்நிலை எலக்ட்ரான்களை இழந்த நிலையில் உள்ளன. அளவற்ற இந்த நேர்வேகம் வேறு அணுக்கருக்களைத் துளைத்துச் செல்வதற்குத் துணையாக வுள்ளது. சமன்பாடுகளின் விளக்கம் ஆகவே, முதலாவதாக சாதாரணக் கரியின் அணுக் கருவிலிருந்தும் ஒரு புரோட்டானிலிருந்தும் ஒரு நைட்ரஜன் அணுக்கரு உண்டாகின்றது (1). இந்த நைட்ரஜன் அணுக் கரு நிலையற்றது: அஃது ஒருபாசிட்ரானே வெளிவிட்டுக் கரியின் அணுக்கருவாக மாறுகின்றது (2). இவ்வாறு புதிதாகத் தோன்றிய கரியின் அணுக்கரு இச்செயலைத் தொடங்கி வைத்த கரியின் பளுவான ஐசோடோப்பு ஆகும். (இச்செயல் முழுவதும் ஆய்வகச் சோதனைகளாலும் நன்கு அறியப் பெற்றதொன்றே.) இப்பொழுது வேருெரு புரோட்டான் தாக்குதலால் இக்கரியின் அணுக்கரு சாதாரண நைட்ரஜன் அணுக்கருவாக மாறுகின்றது (3). இந்த நைட்ரஜன் அணுக் கரு வேறெரு புரோட்டான விழுங்கி நிலையற்ற ஆக்ஸிஜன் அணுக்கருவாக மாற்றம் அடைகின்றது (4). இஃது உடனே ஒரு பாசிட்ரானே வெளிவிட்டு முதல் நைட்ரஜன் அணுக்கரு