பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறை... 257 உண்டாகும் ஆற்றலின் அளவு இந்த விளைவினை எய்தும் பொருட்டு சைக்ளோட்ரானை இயக்குவதற்குச் செலவாகும் ஆற்றலின் அளவில் மிகச் சிறிய பின்னமாகும். ஆகவே, உருமாற்றங்களே உண்டாக்கும் இயக்கங்களைத் தாமாக நடை பெறச் செய்தால் மட்டிலும்தான் செய்முறையில் பயன் விளை விக்கக்கூடிய அணுக்கரு ஆற்றலை உற்பத்தி செய்ய இயலும். அங்ங்ணம் தானக நடைபெறும் ஓர் இயக்கம் மற்ருேர் இயக்கத்தினைத் தூண்டுகின்றது; இரண்டாவது இயக்கம் பிறிதொன்றசீனத் தூண்டுகின்றது; இவ்வாறு தொடர்ந்து நடைபெறுகின்றது. இறுதியில் வேதியியல் எதிர்வினைகளி லுள்ளதுபோலவே, பெரும்பாலான அணுக்கருக்கள் ஒரு தொடர்நிலை இயக்கமாக உருமாற்றம் அடைகின்றன. (II) யுரேனியப் பிளவும் தொடர்நிலை இயக்கமும் யுரேனியப் பிளவு: 1938-ஆம் ஆண்டில் ஹான்," ஸ்ட்ராஸ்மன்' என்ற அறிவியலறிஞர்கள் யுரேனிய அணுக்கருவில் பிளவுறும் செய லேக் கண்டறிந்தனர். இச்செயல் இன்னதென முன்னரே விளக்கப் பெற்றுள்ளது. ஒரு யுரேனிய அணுக்கரு ஒரு நியூட்ரானைக் கொண்டு தாக்கப்பெறுகின்றது; அதல்ை அக்கரு கிட்டத்தட்ட இரண்டு சமபாகங்களாகப் பிளவுறுகின் றது; பெரும்பாலானவற்றில் பல நியூட்ரான்கள் சுழற்றி வீசி எறியப்பெறுகின்றன. இந்த இயக்கம் மேற்சென்ற பத்தியின் இறுதியில் குறிப்பிடப்பெற்ற தொடர்நிலை இயக் கம் உண்டாவதற்குக் காரணமாக இருப்பதால் இது நியூக் கிளியானிக்ஸ் (Neucleonics) என்ற நவீன அறிவியல் துறைக்கு அடிப்படையாக அமைகின்றது. 10. aprrgår - Hahn. 1 I . 6iv Lurrsvudgår - Strassman. 12. ஆரும் இயலில் காண்க. அ-17