பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப். 261 நியூட்ரான்கள் மேலும் உள்ள யுரேனிய அணுக்களைப் பிள வுறச் செய்ய, இவ்வாறு இறுதியாக யுரேனியம் முழுவதும் பிளவடைந்து ஏராளமான ஆற்றல் விடுவிக்கப்பெறு கின்றது. நியூட்ரான்களின் பெருத்த நேர் வேகத்தினால் இச் செயல் முழுவதும் ஒரு விடிையில் ஒரு மில்லியனில் ஒரு பங்கு நேரத்திற்குள் நடைபெறுகின்றது. ஆகவே, தேவையான அளவு தூய்மையான ஆU235 மோ(அல்லது தேவையான அளவு தூய்மையான Pu' மோ) கற்பனையிலும் எண்ண முடியாத வெடிக்கும் ஆற்றலுள்ள வெடி பொருள் என்பது வெளிப்படை, அணுக்குண்டுகள் இந்தப் பொருள்களைக் கொண்டுதான் செய்யப்பெறுகின்றன. அக்குண்டுகளின் அழிக்கும் ஆற்றல் யாவரும் அறிந்ததே. எனவே, ஒரு தொடர்நிலை இயக்கம் நிகழ்வதற்குரிய, வெடிபொருளின்(Explosive) அளவு ஒருபோதுமான அளவு" அதிகமாகவே இருக்க வேண்டும்; இந்த அளவுக்குக் குறைவாக இருந்தால், விடு விக்கப்பெறும் நியூட்ரான்கள் வேறு அணுக்கருக்களிடம் பிளவு நிகழ்த்துவதற்கு முன்னமேயே மேற்பரப்பின்மூல மாகத் தப்பியோடிவிடும். ஆகவே, மேற்கூறப்பெற்ற வெடிபொருள் குறைந்த அளவாக இருந்தால்அது முற்றிலும் தீங்கற்றதாக உள்ளது. ஆயினும், அப்பொருள்களின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும் வெடித்தல் திடீ ரென்று நிகழ்கின்றது; அது தானகவும் நடைபெறுகின்றது. ஆகவே, பலசிறிய அளவுகளில் உள்ள வெடி பொருள் ஒன்று சேர்க்கப்பெற்றுப் பெரிய அளவாகச் செய்யப்பெற்று அணு வெடித்தல் தொடங்கப் பெறுகின்றது; இவ்வாறு பெரிதாக அமைந்த பகுதியே உடனே வெடிக்கின்றது. 19. பொருளின் இந்த அளவைத் தறுவாய் நிறை" (Critical mass) argir gy agpiāGjalif.