பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 அணுக்கரு பெளதிகம் வில் அமைந்து அவற்றைத் தடுத்து நிறுத்தினால், ஒரு தொடர் நிலை இயக்கம் தொடங்கப்பெறக்கூடும். வெப்ப நியூட்ரான் களை உட்கவரும் குணகம் மிகக் குறைவாகவுள்ள கன-நீரும் (D,0)2 மிகத் தூய்மையான பென்சில்கரியும் (Graphite) நடைமுறையில் தணிப்பான்களாக அமைவதற்கு ஏற்ற பொருள்களாகும்: யுரேனியத்துண்டுகளையும் கன.நீரையும் கொண்டு அமைக்கப்பெற்ற ஒரு யுரேனிய அணு உலையில்22 அடியிற் குறிப்பிடப்பெறும் தொடர்நிலை இயக்கம் நடை பெறுகின்றது; யுரேனியப் பிளவிலிருந்து ஒரு தியூட்ரான் விடு விக்கப்பெற்றதும் அது யுரேனியத்துண்டை விட்டு-யுரேனிய அணுக்களுடன் சில மோதுதல்களே நிகழ்த்திய பிறகே-கன -நீரை அடைகின்றது. அங்கு அது ட்யூடெரான்களுடன் மோதுதலால், தன் நேர் வேகத்தை இழக்கின்றது; அது மீண்டும் ஒரு யுரேனியத் துண்டுடன் மோத நேரிடும்வரையி லும் வெப்ப நேர்வேகத்துடன் தணிப்பானில் சுற்றி அலை கின்றது. அங்கும் அணுக்கருவில் புதிய ஒரு பிளவினை உண்டாக்கி அதன் விளைவாக இரண்டு அல்லது மூன்று நியூட் ரான்களை விடுவிக்கின்றது; இவ்வாறு தொடர்ந்து நடை பெறுகின்றது. அணுக்குண்டில் தொடர்நிலை இயக்கம் விரை வாண நேர் வேகத்தையுடைய நியூட்ரான்களால் தூண்டப் பெறச் செய்யும்பொழுது, அவற்றின் நேர் வேகம் துவள்நிலை யற்ற மோதுதல்களால் (Inelastic collisions) தம்முடைய தொடக்க வேகத்தைக்காட்டிலும் மிகச்சிறிய அளவில்தான் குறைக்கப்பெறுகின்றது; ஆனல் யுரேனிய அணு உலையில் தொடர்நிலை இயக்கம் மெதுவான வேகத்தையுடைய நியூட் ரான்களாலேயே பரப்பப்பெறுகின்றது. தொடர்நிலை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதம்: இந்தத் தொடர்நிலை இயக்கத்தை எளிதாகக் கட்டுப்படுத் தித் தக்கமுறையில் கொண்டுசெலுத்தலாம். யுரேனிய அணுக் 21 D-கனஹைட்ரஜன். D.C. கன-நீர் 22 அணு உலை என்பது, யுரேனியமும் ஒரு தணிப் பானும் கொண்ட கருவியின் பெயர்.