பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 265 கள் சிதைந்தழிதலால் யுரேனியம் வெப்பமாக்கப் பெறுகின் றது. இதன் விளைவாக ஆU238-இன் அதுநாதக்கூறுகள் விரி வடைகின்றன; ஆகவே, இந்த அணுக்கருக்களால் அதிகமான எண்ணிக்கையில் நியூட்ரான்கள் சிறையிடப்பெறுகின்றன. இந்நிலையில் வெப்பமாக்குதல் தானகவே தொடர்நிலை இயக் கத்தை நிறுத்திவிடுகின்றது; இதல்ை கருவி முழுதும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் நிலைக்கச் செய்யப்பெறுகின் றது; இந்த வெப்ப நிலையின் அளவு கருவியின் பருமன், வடிவ அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. அன்றியும் வெளியிலிருந்து அணு உலையினுள் நியூட்ரான்களை விழுங்கக் கூடிய ஏதாவது ஒரு பொருளை (காட்மியம் என்றபொருள் இதற்கு மிகவும் தகுதியானது) துழையச்செய்வது சாத்தியப் படக்கூடியது; இதன் காரணமாக, இப்பொருள் இன்னுெரு கூட்டுத்தணிப்பாளுகச் செயற்பட்டுச் செய்கை முறையில் வெப்பநிலையையும் கட்டுப்படுத்தும். ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை எய்தியதும் அணு உலையிலிருந்து ஆற்றல் நீக்கப் பெற்ருலும்கூட வெப்பநிலை அதே குறிப்பிட்ட நிலையிலேயே இருக்குமாறு அணு உல்ை தானகவே நிலைபெறச்செய்து கொள்ளும். ஏராளமான அளவு ஆற்றல் நீக்கப்பெற்றுவிட் டால்-எடுத்துக்காட்டாக நல்ல வெப்பம் கடத்தும் தன்மை யின் விளைவாக்-அணு உலை உடனே சிறிதளவு குளிர்ந்துவிடு கின்றது. சிதைந்தழியும் செயல்களின் அதிர்வு-எண் உடனே பேரளவில் அதிகமாகின்றது; தொடக்க வெப்பநிலேயே மீண் டும் நிலை நிறுத்தப்பெறுகின்றது. படவிளக்கம்: படம் . 40.A என்பது யுரேனியத்தையும் கன - நீரை யும் கொண்ட அணு உலேயின் உட்புற அமைப்பைக் காட்டு கின்றது. போர்க்காலத்தில் இஃது இயற்கையிலுள்ள பாறை யில் குடைந்தெடுக்கப்பெற்ற நிலவறை ஒன்றில் நிறுவப் பெற்றது. டர்ட்டெம்பெர்க் கைச் சேர்ந்த ஹைகர்லாச்' 23. a ffL GLlhlufřả - Wurttemberg. 24. soapsri svirš - Haiger loch,