பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... கடிகார முக வில்லையில்: கதிரியக்கப் பொருள்களால் மற்ருெரு பயனும் உண்டு. மிகக் குறைந்த அளவுகளில் அப்பொருள்கள் ஒளிர்விடும், (Luminescent) பொருள்களுடன் கலக்கப் பெறுகின்றன: இக்கலவை கதிர்வீசலின் விாேவாக மாருத ஒளிர்வினைத் தருகின்றது. இக்கலவைப் பொருள்கள் கடிகார முகவில்லை களிலும் (Dials) அதன் குறி முட்களிலும் சிறந்த முறையில் பயன்படுத்தப்பெறுகின்றன. தொழில் துறைகளில்: கதிரியக்கப் பொருள்கள் தரும் கதிர்வீசல் தொழில் துறைப் பொருள்களின் உள்ளமைப்புக்களிலுள்ள குறைகளை கண்டறியவும் பயன்படுகின்றன; வழக்கமாக இதற்கு எக்ஸ் கதிர்கள்தாம் பயன்பட்டு வந்தன. இப்பொழுது காமாக் கதிர்வீசல் இச்செயலுக்குப் பயன்படுத்தப்பெறுகின்றது. எக்ஸ் கதிர்கள் துளைத்துச் செல்ல முடியாத தடித்த பொருள் களைச் சோதிப்பதில் இம்முறை சிறப்பாகக் கையாளப் பெறுகின்றது; ஆனால், இவற்றை காமாக்கதிர்கள் எளிதில் துளைத்துச் செல்லுகின்றன.இம்முறையால் தொழில்துறைப் பொருள்களைச் சோதிப்பதில் வேறு முறைகளில் சோதிப் பதைவிட பெருத்த நன்மையுண்டு: இம்முறையால் பொருள் களுக்கு யாதொரு விதமான தீங்கும் நேரிடுவதில்லை. இனி, கதிரியக்கப் பொருள்களை உற்பத்தி செய்யும் விதத்தையும் அலை எவ்வாறு பயன்படுத்தப்பெறுகின்றன என்பதையும் சற்று விரிவாக ஆராய்வோம். கதிரியக்கப் பொருள்களின் உற்பத்தி: செயற்கைமுறையில் கதிரியக்கப் பொருள்களை உண் டாக்க வேண்டுமாயின், அதற்கு ஏற்ற பொருளை யுரேனிய