பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž 76 அணுக்கரு பெளதிகம். றன: முதலில் கதிரியக்கமே இல்லாத இடத்தில் படிப்படி யாக அதிக எண்ணிக்கையுள்ள கதிரியக்க அணுக்கள் காணப்பெறும். இம்முறையில் காரீய அணுக்கள் திண்ணிய காரீயத்தில் பரவி விரவிச் செல்லும் நேர் வேகத்தைப் பற்றிய செய்தியைக் கண்டறியலாம். இன்னேர் எடுத்துக்காட்டு: இன்னேர் எடுத்துக்காட்டையும் காண்போம்; இதனு டைய அளவற்ற செய்முறை மதிப்பு இன்னும் தெளிவான விளக்கத்தைத் தருதல் கூடும்:ஒரு வாயு மூடியின் (Gas mask) வடிகட்டியைச் (Filter) சோதித்தவில் முக்கிய நோக்கம் யாதெனில், நஞ்சுப் பொருள்கள் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பாக அமைந்துள்ள அவ்வடிகட்டி எந்த அளவில் அப்பொருள்களை உறிஞ்சுகின்றது என்பதைத் தீர்மானித் தலேயாகும். இதைக் கீழ்க்கண்டவாறு மிக எளிதாக முற்று விக்கலாம்: நஞ்சுப் பொருள்களிலுள்ள தனிமங்களில் ஒன்றன் கதிரியக்க அணுக்களே அந்த நஞ்சுப் பொருள்களு டன் சேர்த்து அப்பொருள்கள் வடிகட்டி மூலமாக அனுப்பப் பெறுகின்றன. இந்தக் கதிரியக்க அணுக்கள் நிலையான அணுக்களைப்போலவே ஒரேவித வேதியியல் எதிர்வினைகளை அடைகின்றன. நஞ்சுப் பொருள்கள் வடிகட்டியின்மூலம் சென்ற பிறகு வடிகட்டியின் மறுபுறம் கதிரியக்கம் காணப் பெறுகின்றதா, அன்ரு என்று நாம் தீர்மானிக்க வேண்டும்: அஃது அவ்வாறு காணப்பெறின், அக்கதிரியக்கத்தின் உறைப்பு (Intensity) வடிகட்டியின் வழியாக அந்நஞ்சுப் பொருள் என்ன சதவீதம் சென்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டும். வடிகட்டியின் தனிப்பட்ட பகுதிகள் கூட சரி பார்க்கப்பெறுதல் வேண்டும். ஏனெனில், நஞ்சுள்ள பொருள் கள் வடிகட்டியின்மூலம் சென்ற பிறகு, நஞ்சுப் பொருள்களை உறிஞ்சுதலால், அவ்வடி கட்டியின் பகுதிகள் அடைந்த கதிரி யக்கத்தின் உறைப்பு தீர்மானிக்கப்பெறும், இந்த முறை