பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 & அணுக்கரு பெளதிகம் பொன் உலோக வடிவில் விழும்பெருளாகப் (Precipitate) பிரிக்கப்பெற்றது; முதலில் கலவையுடன் சேர்த்த பொன் னின் அளவும் விழும் பொருளாகப் பெற்ற பொன்னின். அளவும் கிட்டத்தட்ட சரியாக உள்ளனவா என்பதை அறி வதற்காக இப்பொருள் நிறுக்கப்பெற்றது: அஃதாவது, பொன் அளவறி முறையில் உண்மையில் பிரிக்கப்பெற்றுவிட் டதா என்பது அறுதியிடப்பெற்றது. உண்மையில் அஃது அவ்வாறு இருப்பதாகத்தான் காணப்பட்டது; பிரித்தெடுத் தல் முற்றிலும் வெற்றிகரமாக முடிந்ததாகவே தோன்றி யது. மீண்டும் ஒரு முறை சரி பார்ப்பதற்காகச் சிறிதளவு கதிரியக்கப் பொன் அஃதுடன் சேர்க்கப்பெற்றது. பிரித் தெடுக்கப்பெற்ற பொன்னின் கதிரியக்கம் தொடக்கத்தி லுள்ள பொன்னின் கதிரியக்கத்தைவிட உணர்ந்தறியக் கூடிய அளவுக்குக்-ஒரு கணிசமான அளவுக்குக்-குறை வாகவே இருந்தது. இதனுல் பொன் அளவறி முறைப்படி சரியாகப் பிரிக்கப்பெறவில்லை என்பது மெய்ப்பிக்கப்பெற். றது; சரியான முடிவுபோல் காணப்பெற்றதற்குக் காரணம், விழும்பொருளாகப் பிரிந்த பொன்னுடன் ஒரு சிறிது பிளாட்டினமும் இரிடியமும் கலந்து இருந்தமையே. இவ் வாறு கலந்திருந்த பிளாட்டினம், இரிடியம் ஆகியவற்றின் அளவு மறைந்த பொன்னின் அளவுக்குச் சரியாக இருந்தது. இந்த எடுத்துக்காட்டினல் அளவறி பகுப்பில் கதிரியக்கப் பொருள்களைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமான கூறு என்பதை அறிகின்ருேம் . ஒரு பொருளுடன் ஒரு சிறி தளவு அப்பொருளின் கதிரியக்க ஐசோடோப்பு உளவு காட் டும் வழி துலக்கியாக-குறியாக, அல்லது தொடுப்பாகசேர்க்கப்பெறுகின்றது. இகளுல், உளவு காட்டும் வழி. துலக்கியின் கதிரியக்கம் எல்லா இயக்கங்களிலும் அப் பொருள் பங்கு கொள்ளும் வளர்ச்சியைத் தொடர்ந்து சென்று காண முடிகின்றது; நமக்கு வேண்டுவதெல்லாம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அப்பொருள் இருக்கும் அளவினை அறுதியிடுவதற்கு அதன் அரை-வாழ்வைத் தெரிந்து கொள்