பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அணுக்கரு பெளதிகம் டெமாக்ரீட்டஸின் கொள்கை: உலகாயதத்தை நோக்கிச் சென்ற இந்த எடுப்பான போக்கு எம்பிடாக்கிவீஸின் சமகாலத்தவரான லூஸிப் பஸ்", அவர் மாளுக்கரான டெமாக்ரீட்டஸ்' என்ற மெய்ப் பொருளியல் அறிஞர்களின் காலத்தில் மிக உன்னத வளர்ச்சி யடைந்தது. டெமாக்ரீட்டஸ் என்பவரே மேலைநாட்டு அணுக்கொள்கையின் தந்தையார். இருத்தல் இல்லாமை' என்றவற்றின் முரணு ைகொள்கைதான் லூவிப்பஸ் கண்ட கோட்பாடுகளின் முழுமை (Full) ஒன்றுமின்மை' (Empty) என்ற முரளுன கொள்கையாக வடிவெடுத்தது. முழுமை' என்ற கருத்து குறிப்பது இதுதான்: முழுமைதான் இறுதி யான, பிரிக்க முடியாத, துகள்களாக உள்ளன; இத்துகள்கள் தாம் அணுக்கள். இவற்றினிடையே இருப்பது ஒன்று மின்மை தான்-வெட்ட வெளியே. அணு என்பது தூய்மை யான இருத்தல்; அது நிலைபேறுடையது; அழிவில்லாதது. ஆயினும், முடிவிலா எண்ணிக்கையுள்ள அணுக்கள் இருப்ப தால், தூய்மையான இருத்தல் சில குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு முடிவிலா எண்ணிக்கை அளவு மீண்டும் மீண்டும் தோன்றக்கூடும். எனவே, வரலாற்றிலேயே முதல் தடவை யாக மிகச் சிறிய, இறுதியான, பிரிக்க முடியாத துகள்கள்அணுக்கள்-எல்லாச் சடப்பொருள்களின் அடிப்படை அலகு களாக உள்ளன என்ற கருத்து எழுந்தது. இவ்வாறு அணு பற்றிய பொதுமைக் கருத்து பாகுபடுத்தியறியப்பெற்று, இரண்டு கிளைப் பொதுமைக் கருத்துக்களாக வடிவெடுத்தது. அஃதாவது: ஒன்று, அணுக்கள் மற்ருென்று அணுக்கள் இயங்கும் இடமாம் வெட்டவெளி. இக்கருத்து எழுவதற்கு முன்னதாக, பொருளால் நீட்டப்பெற்ருே அல்லது அகட் டப்பெற்ருே வெளி விரிந்திருக்க வேண்டும்; சுத்தமான வெட்டவெளி என்பது மனத்தாலும் எண்ணமுடியாத ஒன்று. ஆனால், இன்று வெட்டவெளி ஒரு முக்கியமான I 3 GMT srstílusiv-Leucippus. i 4 Gu-Lorr#ifull–6h-Democritus.