பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 283 செயற்கை முறையில் உண்டாக்கப்பெற்றுள்ளது; அவை ஒவ்வொன்றும் கதிரியக்கமுள்ளதாகவுள்ளது என மெய்ப் பிக்கவும் பெற்றுள்ளது. இந்த ஐசோடோப்புக்களில் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடியதன் பொருண்மை-எண் 99 ஆகும்; அதன் அரை-வாழ்வு கிட்டத்தட்ட நான்கு மில்வி யன் ஆண்டுகள் ஆகும். பூமியின் வயதை நோக்க இது மிக வும் குறைந்த காலமாக இருப்பதால், 43 என்ற தனிமம் அளந்து காணக்கூடிய அளவில் இயற்கையில் நிச்சயமாக இருக்கமுடியாது. இந்தத் தனிமத்தை ஒரு யுரேனிய அணு உலேயில் (ரீயாக்டரில்) செயற்கை முறையில் உற்பத்தி செய் யக்கூடுமாதலால், அண்மையில் டெக்னீஷியம் (குறியீடு: TC) என்பதாக அதன் பெயர் இடப்பெற்றுள்ளது. ஆகவே, மேற் கூறிய மிகவும் நிலைத்திருக்கக்கூடிய ஐசோடோப்பு TC" என்று குறியிடப்பெறுகின்றது. 61 என்ற தனிமத்தின் நிலை யும் இதைப்போன்றதே. இந்த 61 என்ற தனிமமும் சில கணிப்பொருள்களில் கண்டறியப்பெற்றதாக நம்பப்பெற்றது; இல்லினியம் (Illinium) என்ற பெயரும் அதற்கு இடப்பெற் றிருந்தது.ஆயினும், இந்தக் கண்டுபிடிப்பினை உறுதிப்படுத்தக் கூடவில்லை. ஆகவே, இந்த இரண்டு பொருள்களும் நிலத்த வடிவில் இயற்கையில் இல்லை என்பது உறுதிப்படு கின்றது. ஆனல், இந்தத் தனிமங்களே, கதிரியக்கப் பண்புகளைக் கொண்டனவாக உற்பத்தி செய்யக்கூடுமாதலின், அவற் றைக்கொண்டு வேதியியல் எதிர்வினைகளையும் உண்டாக்கு வது சாத்தியப்படக்கூடியதே. கதிரியக்கம் சிறிதளவுகூட வேதியியல் செயல்களில் குறுக்கிடுவதில்லை. ஆகவே, 43 என்ற தனிமத்தின் வேதியியற்பண்புகள் தொடர்ச்சியாகவுள்ள சோதனைகளால் கண்டறியப்பெற்றுள்ளன. 61 என்ற தனி மத்தைக் கண்டறிவது மிகவும் சிரமமாகவுள்ளது; ஏனெனில், அஃது அருமண்கள் (Rare earths) எனப்படும் தனிமங்களில் ஒன்ருகும்; அதனுடைய வேதியியற்பண்புகள் அந்தக் குழுவிலுள்ள ஏனைய தனிமங்களின் பண்புகளைப்போலவே உள்ளன.