பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 287 சிதை மாற்றத்தின் முழுதும் தழுவிய தோற்றத்தை அறுதி யிடுவது சாத்தியமாக இருந்தது; ஒரு குறிப்பிட்ட காரணத் திற்காக உயிரியினுள் செலுத்தப்பெற்ற யாதாவது ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு பல்வேறு பகுதிகளிலும் எந்த அளவுகளில் உள்ளன என்பதைச் சரி பார்த்தே இஃது அறுதியிடப்பெற்றது. எனினும், இந்தக் குறிப்பிட்ட பொருளை இதற்கு முன்னர் உயிரியில் இருக்கும் வேதியியல் வகையில் முழுதும் ஒத்துள்ள பொருளிலிருந்து வேறுபடுத்தி அறிதல் முற்றிலும் இயலாததாக இருந் தது. இதல்ை மேலே அறுதியிட்ட செய்தி நம்பத் தக்க தாக இல்லை; அதுவும் சிறப்பாகப் பல்வேறு உள்ளுறுப்புக் களினிடையே செலுத்தப்பெற்ற பொருள் எந்தவேகத்தில் வினியோகம் ஆகின்றது என்பதை உறுதியாக நம்ப முடிய வில்லை. ஆனல், அணுக்களின் கதிரியக்கத்தைக்கொண்டு அவற்றைக் குறியிடும் துறை நுணுக்க முறை (Technique of Labelling) இச்சங்கடத்தை முற்றிலும் நீக்கிவிட்டது. இந்த உளவு காட்டும் வழி - துலக்கித் துறை துணுக்க முறையிஞல் நாம் உயிரியினுள் செலுத்திய அணுக்களை ஏற்கெனவே அங் கிருந்த அணுக்களினின்றும் வேறுபடுத்தி அறிய முடிகின்றது. எடுத்துக்க்ாட்டாக, பார்ன்", ஷ்ராம்", ஸிம்மர்", என்ற அறிஞர்கள் கதிரியக்கப் பாஸ்வரத்தைக் கொண்ட ஊட்ட முள்ள புலத்தில் புகையிலைப் பயிரைக் சாகுபடி செய்தனர்; பர்ஸ்வரம் உயிர் வாழ்பவைகட்கு (Organic life) மிகவும் இன்றியமையாத பொருளாதலின், கதிரியக்கப் பாஸ்வரம் செடிகளில் உண்டாக்கிய வளர்ச்சியையும் அது சென்ற சுவடு களையும் நன்ருக உற்றுநோக்க முடிந்தது; அப்பொருள் அதிகச் செறிவுடன் திரண்ட இடங்களையும் அறிய முடிந்தது. கதிரியக்கப் பாஸ்வரத்தின் பெரும் பகுதி மிகத் துளிராக 47. urri gör -Born 48. apgrrrib - Schramm. 49. Solihupff - Zimmer.