பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 அணுக்கரு பெளதிகம் வுள்ள சிறிய இலைகளுக்கும், அதைவிடக் குறைந்த பகுதி அவற்றின் கீழுள்ள இலைகளுக்கும், இன்னும் குறைந்த பகுதி முற்றிலும் வளர்ச்சிபெற்ற இலைகளுக்குமாகச் சென்றது, மரச்சாறு செல்லுவது நின்ற ஒரு இலையில் மட்டிலும் பாஸ் வரம் சிறிதும் உறிஞ்சப்பெறவில்லை. இம்முறையில் மேற் கொண்ட இன்னேர் ஆராய்ச்சி செடியில் பாஸ்பரம் செல் லும் வேகத்தை அறுதியிட்டது; அது விடிை ஒன்றுக்கு 10 செ. மீ. வீதம் சென்றதாகக் கண்டறியப்பெற்றது. பிராணிகளின் வளர்-சிதை மாற்றத்தைக் கண்டறி வதிலும்: செயற்கை முறையில் உண்டாக்கப்பெற்ற கதிரியக்கப் பொருள்கள், குறிப்பாகக் கதிரியக்கப் பாஸ்வரம், பிராணி வளர்-சிதை மாற்றத்தை ஆராயவும் பயன்படுத்தப்பெறு கின்றன. இங்குப் பிராணிகள் உண்ணும் உணவில் பாஸ்வரம் கலக்கப்பெற்றது; அல்லது அவற்றின் உடலில் குத்திப் புகுத் தப்பெற்றது (ஹெவ்சி.Heves). இந்தத்துறை துணுக்க முறை சிறிது நேரத்தில் உயிரியின் எப்பகுதிகளில் பாஸ்வரம் படியும் போக்கைப் பெற்றுள்ளது என்று தீர்மானிக்கவும், அதே சமயத்தில் அஃது அகற்றப்பெறும் வேகத்தை அறுதியிடவும் சாத்தியப்படச் செய்கின்றது; இதனுல் வளர்-சிதை மாற்றத் தைப் பற்றிய தகவலை எண் - முறையிலும் விகித முறையி லும் அடைவதோடன்றி விவரங்களுடனும் பெற முடிகின் றது. பிற செய்திகளுடன், ஒரு குறிப்பிட்ட காலஎல்லேக்குப் பிறகு பாஸ்வரம் முக்கியமாக எலும்புகளிலும் கல்லீரலிலும் படிகின்றது என்றும், மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு அது பற்களில் படிகின்றது என்றும் உறுதிப்படுத்தப்பெற் றுள்ளது. இவ்வாறு பல முக்கியமான உயிரியல்பற்றிய எடு கோள்களைப் (Data) பெற முடிகின்றது. இத்தகைய சோதனைகளுக்குத் தேவையான கதிரியக்கப் பொருள்களின் அளவுகளும் மிகக் குறைவாக இருப்பதால், அவற்ருல் உயிரிக்கு யாதொரு தீங்கும் நேரிடுவதில்லை.