பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 2 : 1 உள்ளன என்பதை நாம் நன்கு அ றி வோ ம். இவற் றுள் வெள்ளுடலிகள் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப் பெற்றுள்ளன; அவற்றுள் பாலிஃமார்போ நியூக்ளியர் லூக்கோ சைட்ஸ்," இயோசினேஃபிலிக் லூக்கோசைட்ஸ்," பேசோ ஃபிலிக்லுக்கோசைட்ஸ்" என்பவை மிகவும் முக்கியமானவை. அவை தம்முள் அளவிலும், உள்ளமைப்பிலும் பல பொருள் களால் கறைப்படுவதிலும் மாறுபடுகின்றன. எக்ஸ் கதிர்கள் முதலில் லிம்ஃபோசைட்ஸ் என்ற அ ணு க் க ளி ன் எ ண் ணி ைக ைய க் குறையச் செய்கின்றன; பாவி மார்ஃபோ நியூக்ளியர் லூ க் கோ ைச ட் ஸ் என்ற அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன; ஆளுல், சிறிது காலம் கடந்ததும், லூக்கோசைட்ஸ் பெருக்க மடைவது குறைந்துவிடுகின்றது. அதற்கு மாருக, உடலினுள் புகுத்தப்பெற்ற கதிரியக்கப் பாஸ்வரத்தின் கதிர்வீசல் லிம்போ சைட்ஸ்களை ஒருகுறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கிற தில்லை; ஆனால், அதற்குப் பதிலாக நிரந்தரமான நிலையில் கணிசமான அளவுக்கு பாலிமார்ஃபோநியூக்ளியர் லூக்கோ சைட்ஸின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுகின்றது. மேலும், மானோசைட்ஸ் என்ற உயிரணுக்களும் இயோசிளுேஃபிலிக் லூக்கோ சைட்ஸ் என்னும் உயிரணுக்களும் ஓரளவு பாதிக்கப் பெறுகின்றன; ஆனால், தீவிரமாகப் பாதிக்கப் பெறுவதில்லை. இயோசினேஃபிலிக் லூக்கோ சைட்ஸும், குருதியிலுள்ள செவ்வுடலிகளும் எண்ணிக்கையில் சிறிது அதிகப்படுகின்றன. லூக்கேமியா நோய்: இந்தக் குறிப்பிட்ட விளைவு லூக்கேமியா (Leucamia) என்ற நோயின் சில வகைச் சிகிச்சை செய்யும் முறைக களில் கதிரியக்கப் பாஸ்வரத்தைப் பயன்படுத்தி முயலுவதில் 56. Polymorpho nuclear leucocytes. 57. Eosinophic leucocytes. 58. Basophlic leucocytes