பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 4 அணுக்கரு பெளதிகம் ஏற்றுக்கொள்கின்றதா அன்றி ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதை உற்றுநோக்கி அறியலாம். இந்தத் துறை நுணுக்க முறையைக் கையாண்டு தடைப்படாத செயல்களிலிருந்து தடைப்பட்ட செயல்களைக் கண்டறிதல் சாத்தியப்படுகின் றது. இம் முயற்சிகளின்மூலம் ஒரு புதிய மருத்துவக் குறை யறி முறை (Diagnosis) தோன்றுதல் கூடும். (IX) நிலைத்த ஐசோடோப்புக்களின் பயன் ட்யூடெரானின் பயன்: பல்வேறு தனிமங்களின் அரிய ஐசோடோப்புக்களுள் பொருண்மை எண் 2 ஐ உடைய ட்யூடெரான் எனப்படும் ஹைட்ரஜன் ஐசோடோப்பு சிறந்ததொரு பங்கினைப் பெறு கின்றது; காரணம், அதன் பொருண்மைக்கும் சாதாரண மாகக் கிடைக்கும் பொருண்மை - எண் 1 ஐக் கொண்ட அதன் மற்ருேர் ஐசோடோப்பின் பொருண்மைக்கும் உள்ள விகிதம் ஏனைய தனிமங்களுடைய ஐசோடோப்புக்களின் பொருண்மைகளின் விகிதத்தைவிட மிக அதிகமாக இருப் பதேயாகும். இக்காரணத்தால்தான், இந்த இரண்டு ஐசோ டோப்புக்களின் வேதியியற் பண்புகளில் குறிப்பிடத்தக்க Goli sysopscir (Noticeable differences) osteoroup §eir றன; இப்பண்புகளைக்கொண்டே அவை ஒன்று சேர்ந்திருக் கும்பொழுதுகூட அவற்றை எளிதாக உற்றறிந்து கர்ண முடிகின்றது. ஆகவே, பளுவான ஹைட்ரஜனும் உளவு காட் டும் வழி . துலக்கியாகப் பயன்படுதல்கூடும். எடுத்துக்காட் டாக, கொழுப்பு அமிலங்கள் யாவும் சாதாரணமாகக் காணப்படும் ஹைட்ரஜனுக்குப் பதிலாக பளுவான ஹைட் ரஜனுலானவை: இந்தக் கொழுப்பு அமிலங்கள் ஒர் உயிரியி லுள் புகுத்தப்பெற்று அந்த அமிலங்களே எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பது ஆராயப்பெற் றது. நீண்ட சங்கிலித் தொடர் போன்ற கொழுப்பு அமிலங்கள் கல்லீரலிலும் கொழுப்பு இ ைழ ய ங் க