பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 அணுக்கரு பெளதிகம் ஐசோடோப்புக்களில் ஒன்று உண்டாக்கப்பெறுகின்றது: ஆறு ஐசோப்புக்களும் சாதாரணப் பாதரசத்தில் சம விகிதங் களில் உண்டாகின்றன. இந்தப் பாதரச ஐசோடோப்பு ஒளிபற்றிய ஒரு சில ஆராய்ச்சிகளுக்கு மிகவும் பொருத்த மானது. அஃதாவது, சாதாரணப் பாதரச ஆவி-பாதரச ஐசோடோப்புக்களின் இயற்கையில் கிடைக்கும் கலவைஒரு மின்னுாட்டத்தால் ஒளிரும்படி செய்யும்பொழுது: தனிப்பட்ட ஐசோ.ோப்புக்களின் நிறமாலைகள் (Spectra) மிகச் சிறிய அளவில் . இகின்றன; அவற்றின் நிற மாலேக் கோடுகள் ஒன்றன்மேல் ஒன்முகப் பொருந்துகின்றன; இதை நாம் நேர்த்தியான அமைப்பு (Fine Structure) என்று குறிப்பிடுகின்ருேம். பொன்னிவிருத்து உண்டான பாதரசத் தில் இந்த நேர்த்தியான அமைப்பு காணப்பெறவில்லை; ஆகவே, இந்தக் குறிப்பிட்ட பாதரச ஐசோடோப்பு நிற மாலை காட்டியால் அடையும் அளவுகளுக்கு மிகவும் பொருத்தமானது (டபிள்யூ இ.வில்லியம்ஸ்" என்பார் சில ஆண்டுகட்கு முன்னர் இதனேக் குறிப்பிட்டார்); இதில் சிறந்த நோக்கம் யாதெனில், இயன்றவரை தெளிவான கோடுகளே அடையச் செய்வதே. இ ந் த இ ய லி ன் தொடக்கத்தில் குறிப் பி ட் ட நோக்கத்தை - திாழ்ந்த பொருள்களினின்றும் உயர்ந்த பொருள்களை அடைதலேநினைவுகூர்ந்தால், எல்லாப் பொருள்களின் உருமாற்றத்தைப் பற்றிய கவர்ச்சிகரமான குறிப்பை நாம் வியந்து பாராட்ட முடியும்; குறிப்பிட்ட இந்த எடுத்துக்காட்டில் பாதரசத் தைக் காட்டிலும் பொன்தான் உயர்ந்தது என்பதற்குப் பதிலாக பாதரசமே பொன்னைவிட மிகவும் உயர்ந்தது என் பதை அறிந்து பாராட்ட முடியும். இறுவாய்: இஃதுடன் அணுக்கரு பெளதிகச் செய்முறைப் பிரயோ கங்களைப்பற்றிய நமது மதிப்பீடும் நிறைவு பெறுகின்றது. 60. Lišāńg. 3), offi)a?uthsh)-W.E.Williams.