பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 g {} அணுக்கரு பெளதிகம் களில், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், ஃபிரான்ஸ்ஆகிய நாடுகளில்,பொதுமக்கள் காட்டிய அக்கறை யுடன் ஒப்பிடுமிடத்து மிகமிகக் குறைவாகவே இருந்தது என்றே சொல்ல வேண்டும். எனவே, அமெரிக்காவில் 1939-க்கு முன்னர் உயர்-மின் அழுத்தப் பொறிகளும் சைக் ளோட்ரான்களும் தளவாடங்களாக அமைந்த நவீன ஆராய்ச்சி ஆய்வகங்கள் தொடர்ந்தாற்போல் தோன்றிக் கொண்டிருந்தபொழுது, ஜெர்மானிய நாட்டில் தேவை யான அளவு கருவிகளேக் கொண்ட இரண்டே இரண்டு ஆய்வகங்கள்தாம் இருந்தன; அவை இரண்டும் அரசாங்கத் தினுல் ஆதரவு அளிக்கப்பெறவில்லை; ஆனல் அவற்றை கெய்லர் வில்ஹெல்ம் கெசல்ஸ்சேப்ட்" என்ற தனியார் நிறு வனம்தான் அமைந்தது. இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையங் களும் ஹெய்டெல்பெர்க் (Heidelberg), பெர்லின்-டாலெம் (Berlin-Dahlem) என்ற இடங்களில் கெய்லர் வில்ஹெல்ம் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் அமைந்திருந்த நிலையங் களே; ஒவ்வொன்றிலும் அணுக்கரு ஆராய்ச்சிக்கேற்ற ஒரு சிறிய உயர்-மின் அழுத்தக் கருவி இருந்தது. அத்தகைய வேலைக்கு ஒரு சைக்ளோட்ரான் இல்லாக்குறை இருந்ததுஹெய்டெல்பெர்க் சைக்ளோட்ரான் தனியார் நிதிகளி லிருந்தே அமைக்கப்பெற்றது; அது முக்கியம்ாக மருத்துவ ஆராய்ச்சிகளுக்காகவே நிறுவப்பெற்றது; அது 1938-இல் தான் தொடங்கப்பெற்றது; 1944-க்கு முன்னர் அது சோதிக் கப்பெற முடியவில்லை. போர் ஏற்பட்டவுடன் ஆட்சியாள ரிடம் எழுந்த அக்கறை அணுக்கரு ஆராய்ச்சிக்கு விரிவான வசதிகளை அனுமதிப்பதற்குக் காரணமாயிற்று. தொழில் துறையில்: தொழில் துறைலில் அணுவாற்றலேப் பயன்படுத்துதல் பற்றிய சிறப்பான ஆராய்ச்சிகளை அடியிற்காணும் அறிக்கை 6. கெய்லர் வில்ஹெல்ம் கெசல்ஸ் சேப்ட்-Kaiser Wilhelm Gesellschaft.