பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 303 அதன் இயக்குநர் டெபி' என்பார் வெளியேறுவதற்கும் அது காரணமாக அமைந்தது; டச் குடிமகளுக விருந்த டெபி ஜெர்மானிய இராணுவ ஆட்சியின்கீழ் தொடர்ந்து பணி யாற்ற முடியாது போய்விட்டது. சாத்தியப்படக்கூடிய இரண்டு வழிகள்: 1939-இல் இலையுதிர்காலத்தில் நடைபெற்ற முதல் மாநாடுகளின் முடிவில்ை, அணு ஆற்றலைப் பயன்படுத்து வதில் இரண்டு வழிகள் சாத்தியப்படக் கூடியவை என்பது புலஞயின. சாதாரண யுரேனியத்திலிருந்து யுரேனியத்தின் அரிய ஐசோடோப்பினைப் (யு-235) பிரித்தெடுப்பதில் நாம் முயற்சி செய்யலாம். போரின் (Bohr) கொள்கையின் அடிப் படையில் அமைந்த வாதங்களைப் பின்பற்றி இந்த ஐசோ டோப்பு மெதுவான-நியூட்ரானின் இயக்கத்தை முதன்மை யாகப் பயன்படுத்திக் கட்டுப்பாடுள்ள ஆற்றலே உண்டாக்கு வதிலும், விரைவான-நியூட்ரானின் இயக்கத்தை நேரடி யாகப் பயன்படுத்திக் குண்டுகளில் வெடி பொருளாகவும் உடனே பயன்படக் கூடியதாகச் செய்யப்பெறலாம்; எனினும், யு-235 ஐப் பிரித்தல் ஒரு பிரச்சினையாகவே இருந் தது; இதற்குப் பொறியியல் துறை நுணுக்க முறைகள் மிகமிகத் தேவையாக இருந்தன. இரண்டாவதாக, நாம் அணுக்கருப் பிளவில் உண்டாகும் நியூட்ரான்களை உட்கவரா மல் அவற்றின் வேகத்தைத் தணிக்கவல்ல ஒரு பொருளுடன் சாதாரண யுரேனியத்தைக் கலக்கலாம். மெதுவாகவுள்ள இந்த நியூட்ரான்கள் யு-235 ஐப் பிளவுறச் செய்து தொடர் நிலை இயக்கம் நிலைபெற்று தடைபெறச் செய்கின்றன. யு-238-ஆல் உறிஞ்சப்பெறும் அதுநாத மண்டலத்தை விரைவில் கடப்பதற்காக நியூட்ரான்களின் விரைவான வேகத் தளர்ச்சி (Daceleration) வேண்டப்பெறுகின்றது; ஏனெனில், அவை உறிஞ்சப்பெற்றுவிட்டால், அவை 19, Qu lo-Debye.