பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 305 ஆராய்ச்சி இந்த முடிவிற்குக் கொண்டு செலுத்தியது: அஃ தாவது, சாதாரண நீர் ஒரு தணிப்பானகப் பயன்படுவதற்கு உகந்ததாக இராவிடினும், நீரினைக் (D,o) கொண்டோ, அன்றி மிகவும் தூய்மையான கரியினைக் கொண்டோ ஆற் றலை நேர் அளவில் (Positive amount) உண்டாக்குவது சாத் தியப்படுகின்றது. தணிப்பானும் யுரேனியமும் அடுக்குகளில் அமைக்கப் பெற்ருல்தான் இது முற்றுப்பெறும். எனினும், இந்த ஏற்பாட்டிற்கு மேற்கொள்ளப்பெறும் பொருள் கள் மிகமிகத் தூய்மையானவையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஆற்றலை விளைவிப்பதற்கு ஒரு குறிப் பிட்ட மீச்சிறு கருவியின் பருமனும் இன்றியமையாதது எ ன் பது ம் தெளிவாகப் புலனாகியது. என்ருலும், குறைந்த பருமலுள்ள கருவியினைக் கொண்டே, கருவி பொருத்தமான அளவுல் பெருக்கமடையச் செய்யப்பெற் ருல் ஆற்றல் உற்பத்தி நடைபெறுமா என்பதைத் தீர்மானிப் பதற்கும் சாத்தியப்படுகின்றது. எனவே, இத்தகைய ஒரு சிறிய கருவிக்கு ஒர் அகவயமாக அமைந்துள்ள மூலத்தி லிருந்து நியூட்ரான்களைத் தந்தால் அடுக்கு ஏற்பாடு ஆற்றல் உற்பத்திக்குச் செளகரியமாயிருக்கும்பொழுது மூலத்திலி ருந்து கிடைக்கும் நியூட்ரான்களைவிடப் புறப்பரப்பி லிருந்து நியூட்ரான்கள் அதிகமாகத் தப்பிப் போக வேண்டும்; இந்த ஏற்பாடு அசெளகர்யமாயிருக்கும் பொழுது மூலத்திலிருந்து வரும் நியூட்ரான்களைவிடக் குறைவான நியூட்ரான்களே தப்பிப் பேர்கின்றன. ஒரு நியூட்ரான் மூலத் திலிருந்து தொடர்ந்து தரப்பெறும் இந்தச் சிறிய மாதிரிக் கருவிகள் நியூட்ரான் புகுத்தப்பெற்ற அடுக்குகள்' என்று வழங்கப்படுகின்றன. அடுக்கிலிருந்து தப்பிப் போகும் நியூட் ரான்களின் எண்ணிக்கை முலத்தினின்றும் தரப்பெறும் நியூட் ரான்களின் எண்ணிக்கையுடன் கொண்டுள்ள K என்ற விகி 21. நியூட்ரான்கள் புகுத்தப்பெற்ற அடுக்குகள் - Neutron injected piles {}2 ساسسه فی