பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 3.13 ராக இருந்த ஸ்பியர் என்பாருக்கும் போராயத்த அலுவலர் களுக்கும் அறிவிக்கப்பெற்றன. முக்கியமான தகவல்கள்: அறிவிக்கப்பெற்ற தகவல்கள் வருமாறு: யுரேனிய அடுக்கிலுள்ள அணு ஆற்றல் தொழில் துறையில் பயன் படுத்தப்பெறுவது சாத்தியமானது என்பதற்குத் திட்டமான மெய்ப்பிப்பு கிடைத்துள்ளது. மேலும், கொள்கையளவில் அணுகுண்டுகட்கு வேண்டிய ஒரு வெடிபொருள் அத்தகைய அடுக்கிலிருந்து உண்டாக்கப்பெறக் கூடும் என்பது எதிர் பார்க்கப்பெற்றது. எனினும், அணுகுண்டுப் பிரச்சினை பற்றிய தொழில் நுணுக்கங்களின் ஆராய்ச்சி-எடுத்துக்காட்டாகத் தறுவாய் அளவு-மேற்கொள்ளப் பெறவில்லை. ஒரு யுரேனி யம் அடுக்கில் வளர்க்கப்பெறும் ஆற்றல் எதற்கும் முக்கிய மானதாகக் கொள்ளலாம் என்ற செய்திக்கு முக்கியத்துவம் தரப்பெற்றது; காரணம், இந்நோக்கம் எளிதாகவும் அதிகச் செலவின்றியும் முற்றுப் பெறக்கூடியதாக இருந்தது. யுரே' னிய ஐசோடோப்புக்களைப் பிரித்தெடுப்பதுபற்றி ஒரு பெரிய தொழிற்துறைத் தளவாடங்களின்றி ஒர் அணு வெடி பொருளை உண்டாக்கவல்ல எந்த முறையும் அறியப்பெற வில்லை தற்செயலாக, புரோட்டோ-ஆக்டினியம் என்ற தனி மத் ைத அணு வெடிபொருளாகப் பயன்படுத்தும் முறையும் ஆராயப்பெற்றது: காரணம், அதன் அணுக்கரு குறைந்த அளவு 10:eV ஆற்றலைக்கொண்டு பிளவுறக்கூடியதாகவும், அதன் விளைவாக ஒரு விரைவான தொடர்நிலை இயக்கத்தை உண்டாக்கக்கூடியதாகவும் இருந்தது. ஆயினும், அந்தத் தனிமத்தின் தேவையான அளவுகளைத் தயாரித்தல் நடை முறையில் சாத்தியமில்லை என்று கருதப்பெற்றது. சிறிய அளவில் யுரேனியத் திட்டம்: இத்திட்டத்தின் எதிர்காலத்தைப்பற்றி ஒரு முடிவுடன் இருந்த இக்கூட்டத்தைத் தொடர்ந்து ஸ்பியர் (Speer) என்