பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 6 அணுக்கரு பெளதிகம் மேற்கொள்ளப்பெற்ற சோதனைகளும் யு-238-இல் நடை பெறும் பிளவுறும் செயல்களில் புதிய அறிவினைத் தந்தது. போத்தேயால் மேற்கொள்ளப்பெற்ற ஒரு கொள்கை யாராய்ச்சிதானகவே ஊட்டிக்கொள்ளக் கூடிய ஒரு மீச்சிறிய அளவு அடுக்கில் நிறுத்தத் தூரம்' (Stopping distance) (பிரெம்ஸ்லான்ஐே)" என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத் தியது. மேலும் ஒர் ஆராய்ச்சி: அதிக அளவு கனநீரையும் யுரேனிய உலோகத்தையும் கொண்டு மேலும் செய்யப்பெற வேண்டிய சோதனைகளுக்கு ஆயத்தம் செய்வதற்காக, பெர்லினிலுள்ள கெய்லர் வில் ஹெல்ம் பெளதிக ஆராய்ச்சி நிலையம் அடுக்கிற்கு நீரையும் பென்சில் கரியையும் புறமூடியாகக்கொண்டால் ஏற்படும் விளைவுகளைக் காணும் ஓர் ஆராய்ச்சியைத் தொடங்கியது: யுரேனியத்தின் அனுநாத உட்கவர்ச்சி வால்ட்ஸ்," ஹேக் லெல், செளர்வெய்ன்" என்ற அறிஞர்களால் ஆராயப் பெற்றது. மேலும், பெர்லின் தொழில்துறை உயர்நிலைப் பள்ளியில் பல்வேறுபட்ட பொருட்கோவைகளின் உட்கவர் குறுக்கு-வெட்டுக்கள் ராம்", வால்ட்ஸ், ஹேக்ஸெல் என்ற ஆய்வாளர்களால் அளவிடப்பெற்றன. அனுநாத எல்லை களின் வெப்பநிலை விரிவிலிருந்து உண்டாகும் ஆற்றல் உற் பத்தியின் வெப்பம் மாருநிலைப் பிரச்சினைபற்றியவரையில், செளர் வெய்ன், ராம் ஆகியவர்களால் பெர்லின்-டாலெம் உயர் மின் அழுத்தப்பொறியில் (Plant) செய்யப்பெற்ற சோதனைகள் குறிப்பிடத் தக்கவைகளாக இருந்தன. 57. 1901 Lhavavirgirčgg-Bremslange. 58. வால்ட்ஸ்.Voltz. 59. ஹேக்ஸெல்.Haxel. 60. Gererri Gatlijst-Sauerwein. 61. girth-Ramm.