பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 31 7 விமானத் தாக்குதல்களின் விளைவு: 1943-ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் ஒரு போர்ப் படையின் தாக்குதலால்" நார்ஸிக் ஹைட்ரோ எலக்ட்ரோ aúlio & Gum so-(Hydro electrolytic plant) @*usbuGauš, னின்றும் நிறுத்தப்பெற்றது. அதன் புனரமைப்பு தொடங்கப் பெற்றது; ஆனால், நார்வேயிலுள்ள ஒரு பொறுப்பான இராணுவத் தலைவர் மேற்படி பொறியைத் திறனகப் பாது காப்பதென்பது, அதுவும் சிறப்பாக விமானத் தாக்குதல்களி னின்றும் காப்பதென்பது, இயலாத செயல் என்று அறிவித் தார். 1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தீவிரமான விமானத் தாக்குதல் ஒன்றனல் அப்பொறி முற்றிலும் அழிக் கப்பெற்றது. எனினும, ஜெர்மெனியில் அச்சமயம் கிட்டத் தட்ட இரண்டு டன் கனநீர் கிடைத்தது; நம்முடைய கணக் கீடுகளின்படி ஆற்றல் உற்பத்திசெய்யும் அடுக்கினைச் சமைப் பதற்கு அந்த அளவு நீர் கிட்டத்தட்டப் போதுமானது. ரெய்ச்ஸ்ஃபோர்ஸ்சுங்க்ஸ்ரட் ஜெர்மெனியில் ஒரு புதிய கன நீர் உற்பத்தித் தொழிற்சாலையை அமைப்பதற்கு எவ்வித மான தீவிர ஏற்பாடுகளையும் செய்யவில்லை; ஐ. ஜி. லெளன' என்ற இடத்திலுள்ள சிறிய பொறியிலும்" மெதுவான முன் னேற்றம்தான் காணப்பெற்றது. விமானத் தாக்குதல்களின் காரணமாகவும் ஜெர்மானிய உற்பத்தியில் ஏற்பட்ட முழு தும் தழுவிய அலுப்பின் காரணமாகவும் அத்தகைய பெரிய கட்டடத் திட்டங்களை மேற்கொள்வது உண்மையில் கிட்டத் தட்ட சாத்தியப் படாததாகவே இருந்தது. 1944-ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில் ஃபிராங்ஃபர்ட்டின்'மீது ஏற் பட்ட விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு உண்டை வடிவ 62. போர்ப்படையின் தாக்குதல்-Commando raid. 63. g. 8). Gavsr@-I. G. Leuna. 64. §§u Qurro-Pilot plant 6 5. stol og strălóol uiřL--Frankfurt