பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 () அணுக்கரு பெளதிகம் ஹெசின்ஜென்' என்ற இடத்திற்கு மாற்றப் பெற்றது. ஜெர் லாச்சிலிருந்து பெற்ற ஆணையின்படி ஹெய்கெர்லாச்" என்ற சிற்றுாரில் ஒரு கெட்டியான குன்றில் அகழப்பெற்ற ஒரு கருவறையில் யுரேனிய அடுக்கு திரும்பவும் சமைப்பதற்கு வேண்டிய தளவாடங்சள் நிறுவப்பெற்றன. 1945-ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலும் தேவையான பொருள்களின் பெரும் பகுதி (கிட்டத்தட்ட 1.5 டன் கனநீர், 15 டன் யுரேனியம், 10 டன் பென்சில் கரி, கட்டுப்படுத்தும் கோல் களுக்குரிய காட்மியம் முதலியவை) ஹெய்கெர்லாச் சில் வந்து சேரவில்லை; அதன்பிறகு, கனநீரில் யுரேனிய கனசதுரக்கட்டிகளைக் கொண்டுபென்சில் கரியாலான ஒருபுற மூடியுடன் ஒரு புதிய அடுக்கு நிறுவப்பெற்றது (வர்ட்ஸ், பிஸ்செர், பாப், ஜென்ஸன், ரிட்டர்). ஸ்டாட்டில்ம்' என்ற இடத்திலுள்ள ரெய்சஸ் ஃபோர்ஸ் சுங்ஸ்ரட்டின் கிளை நிறு வனத்திற்கு எஞ்சிய கன நீரும் கிடைத்த யுரேனியத்தின் பெரும் பகுதியும் தரப்பெற்றன. ஹெய்கெர்லாச் அடுக்கு ஏழு மடங்கு நியூட்ரான் அதிகரிப்பினை விளைவித்தது. எனி னும், ஹய்கெர்லாச்சில் கிடைத்த பொருள்கள் K= 0 என்ற நிலையை உண்டாக்குவதற்குப் போதுமானவைகளாக இல்லை. ஒரு சிறிய அளவு யுரேனியம் கிடைத்திருந்தால் ஒருக்கால் போதுமானதாக இருந்திருக்கும்; ஆல்ை அடை வதற்குச் சாத்தியம் இல்லை. காரணம், பெர்லினிலிருந்தோ ஸ்டாட்டில் மிலிருந்தோ ஹெசின்ஜெனுக்கு போக்குவரவு இல் லாதிருந்தது. ஏப்ரல் 22-ஆம் நாள் ஹெய்கர்லாச் அமெரிக்கர் களால் கைப்பற்றப்பெற்று அந்தப்பொருளும் பறிமுதல் செய்யப்பெற்றது. ஜெர்மெனியின் திருப்பம்: இங்கு அறிவிக்கப்பெற்ற ஜெர்மானியரின் செயலே இத் துடன் ஒத்துள்ள நாம் அறிந்த வரையிலுள்ள ஆங்கில-அமெ 71. Gopółóggsār-Hechingen. 72. Gopulärtsorré-Haigerloch. 73. Givl-stulasīlbStadtilm.