பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொள்கை | 1 'திரவ நீரிலும் அவை இறுக்கமாகத்தான் பிணைந்துள்ளன. ஆனால், அவை ஒழுங்கற்ற நிலையில் உள்ளன; இந்த ஒழுங் கற்ற நிலையில்தான் அவை அதில் நெகிழ்ந்தோடுகின்றன. இறுதியாக, நீராவியில் அந்த அணுக்கள் (சரியாகச் சொல் வோமானல் மூலக் கூறுகள் (Molecules) எனப்படும் அணுக் களின் தொகுதிகள்) ஒன்றுக்கொன்று அதிகத் தொலைவி லுள்ள, பறந்து செல்லும் பழ.ஈக்களின் கூட்டத்தை ஒத்தி ருப்பதாகக் கொள்ளலாம். இக் கருத்து வேறு பல ஆராய்ச்சியாளர்களாலும் ஏற் றுக் கொள்ளப்பெற்று, அதன் பிரயோகம் அளவற்ற முறை யில் வளர்ந்தது. யவனர்களுக்கு அணுக்களைப்பற்றிய பொதுமைக் கருத்து இவ்வுலகைப் புரிந்துகொள்ளும் ஒரு வழித் துறையாகவும், கண்ணுல் காணக் கூடியவற்றிற்கு ஒரு காரணமாகவும் இருந்தது. இப்பொழுது அது பண்படாத, உயிரற்ற சடப் பொருளைப்பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வாயிலாக அமைந்து விட்டது. பாயிலின் கொள்கை : அடுத்தபடியாக நாம் குறிப்பிட வேண்டிய அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒர் ஆங்கிலேயர்; ராபர்ட் பாயில்" (கி. பி. 1627-1661) என்ற பெயரைக் கொண்டவர். அவரை ஒரு மெய்ப்பொருளியல் அறிஞர் என்று கொள்வதைவிட ஒரு வேதியியல் விற்பன்னர் (Chemist), பெளதிக அறிஞர் (Physicist) என்று கோடலே ஏற்புடைத்து. அவருடைய முக் கிய ஆராய்ச்சி, வாயுக்களின் கொள்கையைப்பற்றியது; ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு வாயுவின் அமுக்கத்தை யும் கன அளவையும் பெருக்குவதால் வரும் பெருக்கற்.பலன் (Product) எப்பொழுதும் மாருமல் இருக்கும் என்ற விதியைக் கண்டறிந்தார். வேதியியலில் அவர் வேறு பல முக்கிய கண்டு பிடிப்புக்களுக்கும் காரணமாக இருந்தார்; சிறப்பாகக் 26 ராபர்ட் utúš-Robert Boyle.