பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4. அணுக்கரு பெளதிகம் நிரந்தரமான தொண்டு அளவறி வேதியியலைச்" சார்ந்தது; உண்மையில் இத் துறையை முதன் முதலாகக் கண்டறிந்த வரும் இவரே. எரிதல் என்ற செயலின் சரியான விளக்கத்தை முதன்முதலாகத் தந்தவரும்.இவர்தான். இவரது காலம்வரை யிலும் எந்தப் பொருளின் எரிதலிலும் ஃபிலாஜிஸ்டன்’ (Pilogiston)-எரிமுதல்-என்ற ஒரு பொருள் விடுவிக்கப் பெறுகின்றது என்று நம்பப்பெற்று வந்தது. ஆதலால், அப்பொருள் எரிந்த பிறகு கட்டாயம் இலேசாதல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதினர். ஆகுல், லெவாய்ஸர் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தின்னக் கொண்டார்; எரிதலில் அப்பொருள் தீயகம் (ஆக்ஸிஜென்) எனப்படும் ஒருதனிமத்து டன் சேர்கின்றது என்றும், அதல்ை அப் பொருள் எடையில் மிகுகின்றது என்றும் இவர் கருதினர்.இவருடைய கொள்கை சோதனையாலும் மெய்ப்பிக்கப்பெற்றது. அதே சமயத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றையும் இவர் முற்றுப்பெறச் செய்தார். அஃதாவது, வேதியியல் மாற்றங்களால் பொருள் களின் பொருண்மையில் ஏற்படும் வேற்றுமைகளை ஆராய வேண்டும் என்று இவர் அக் கால வேதியியற் புலவர்களைத் துரண்டினர். இதல்ை நமக்கு ஒருவிதி கிடைக்கின்றது;அதனை லெவாய் ஸ்ரே கி. பி. 1174-இல் ஓர் வாய்பாடாக வகுத்தார். ஆனல், பல ஆண்டுகட்குப் பின்னரே அவ்விதி வேதியியற் புலவர் களின் பொதுச் சொத்தாயிற்று. அதுதான் பொருண்மை மாரு விதி' என்பது. ஏற்கெனவே லெவாய்ஸர் ஒவ்வொரு வேதியியல் மாற்றத்திலும் பங்கு கொள்ளும் பொருள்களின் மொத்தப் பொருண்மை மாருதிருக்கும் என்று கூறியிருந் தார். அஃதாவது, புதிதாக உண்டாக்கப்பெற்ற பொருளின் மொத்த அளவு, மாற்றத்திற்குப் பிறகும் முன்கொண்டிருந்த எடையையே கொண்டிருக்கும் என்பது அவர் கண்ட உண்மை. இவ் விதியின் கண்டுபிடிப்பும் அதை முறைப் 29 99Teufú, Goušičiulià)-Quantitative chemistry. 30 Quirósio coup Lost Of Göğ-Law of conservation of mass.