பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொள்கை 15 படுத்திக் கூறியதும் உண்மையில் நவீன வேதியியலின் தோற்றுவாயாக அமைந்தன; ஒரு சில ஆண்டுகளில் அவை பாயிலின் வேதியியலையும் காஸ்ண்டியின் அணுக்கொள்கை யையும் பிணைக்கும் கண்ணியுமாயின. டால்ட்டனின் கோட்பாடு: கி. பி. 1792-இல் செருமானிய நாட்டைச் சார்ந்த ஜே. பி. ரிக்டர்" என்பார் வேதியியல் தனிமங்கள் எப்பொழு தும் ஒரு குறிப்பிட்ட அளவு விகிதங்களில்தான் கலந்து வேதி யியற் கூட்டுப்பொருள்களாகின்றன என்று கண்டுபிடித்தார். ஏதாவது ஒர் அளவுள்ள ஹைட்ரஜன் ஏதாவது ஒர் அள வுள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீர் உண்டாவது என்பது சாத்தியம் இல்லை; ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் முறையே 1 : 8 என்ற விகித அளவுகளில்தான் சேர்ந்து நீர் உண்டாக வேண்டும். அங்ங்ணமின்றேல், மாற்றம் அடையாத ஹைட் ரஜன் அல்லது ஆக்ஸிஜன் எஞ்சியேயிருக்கும். நிறைவீதம மாரு விதி' என்ற இந்த விதியை அக்காலத்தில் டால்ட்டன்" என்பார் வேதியியலின் அடிப்படை விதியாகச் செய்தார்; ஒரு குறுகிய காலத்திற்குள் அது வேதியியலையும் அணுக் கொள்கையையும் இணைப்பதற்கு வழி காட்டியது. இந்த விதியை டால்ட்டன் இன்னும் மிகத் திட்டமாகக் கூறி அதற்கு வடிவகணித முறையில் விளக்கமும் தந்தார். இந்த வடிவகணித விளக்கம்தான் மிகவும் முக்கியமா கின்றது. அதை ஒர் எடுத்துக்காட்டினைக்கொண்டு இன்னும் தெளிவாக்க முயலுவோம். ஹைட்ரஜன் ஆக்ஸிஜனுடன் கலந்து நீர் உண்டாகும்பொழுது, அச்செய்முறையை நவீன துறைச் சொற்களைக் கொண்டு இவ்வாறு நாம் கற் பனையில் காணவேண்டும்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற இரு தனிமங்களின் மிகச் சிறிய துகள்கள்-அணுக்கள் 31 Gg. 19. făl–ir-J. B. Richter. 32 #lamựp sĩgib tpTG# cứ9-Law of constant proportions. 33 Lorčulu-ašt-Dalton.