பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக் கொள்கை 17 யும், அது டால்ட்டனின் அணுக்கொள்கைக்கு அசைக்க முடி யாத நிரந்தரமான அடிப்படைத் தளத்தையும் அமைத்துக் கொடுத்தது. ஒரு குறிப்பிட்ட அளவு வாயுவிலுள்ள அணுக் கள் அல்லது மூலக் கூறுகளின் எண்ணிக்கையை நாம் அறிந் தால் ஒரு தனிப்பட்ட மூலக் கூறின் சேர்க்கை வீதத்தைத் திட்டமாகக் கூறி விடலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நீரின் மூலக்கூறு ஒர் ஆக்ஸிஜன் அணுவையும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டுள்ளது என்று மிகத் திட்டமாகக் கூறி விடலாம். - இவ்வாறு அளவறிமுறையில் அணுக்களின் எடை அல்லது அணுக்களின் பொருண்மை விகிதங்களை அறுதி யிடுவதற்கு ஒருவழி அமைக்கப்பெற்றது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் உள்ள அணுக்களின் முழுமையான (Absolute) எண்ணிக்கை தெரியாவிடினும், ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அமுக்கத்திலும் சமபரிமாணமுள்ள வாயுக்களில் சம எண் ணிக்கையுள்ள மூலக் கூறுகளே இருக் கும் என்பது திச்சயமாக நமக்குத் தெரியும். இது நமக்குப் போதுமானது. ஏனெனில், அஃது அணுக்களினுடையவும் மூலக்கூறுகளினுடையவும் பொருண்மை விகிதங்களைப்பற்றிய தகவலே நமக்குத் தந்துவிட்டது. - சில ஆண்டுகளுக்குள் பெர்ஸிலியஸ்" என்ற ஸ்வீடன் நாட்டு அறிவியலறிஞர் மிக அதிகமான மூலக்கூறுகளின் அணு எடைகளைத் கணக்கிட்டார். அன்றியும், அவர் தனிப்பட்ட அணுக்களினின்றும் எவ்வாறு மூலக்கூறுகள் அமைகின்றன. என்பதுபற்றி மிகத்திட்டமான கொள்கைகளே உண்டாக்கு வதிலும் வெற்றி கண்டார். இன்னும் அவர் மூலக்கூறுகளில் அணுக்களைப் பிணைக்கும் விசைகளின் இயல்புபற்றியும் ஆராய்ந்தார். அவர்தான் ஒரு தனிமத்தின் ஓர் அணு பிறி தொரு தனிமத்தின் ஓர் அணுவுடன் சேர்ந்திருக்கும் விசை யைப்பற்றிக் கூறும்பொழுது வலுவெண்' என்ற கருத்தினை 37 Guff Gm$a$u Jsiv-Berzelius. - 38 6169/06/or-Valency. அ-2 .