பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக் கொள்கை 2 I கொள்கை அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது: மின்சார முறையில் தூண்டப்பெறும் மின் பகுக்கையால் (electrolysis) உண்டாகும்--வேதியியல் மாற்றங்களில் உருமாற்றம் அடைந்த பொருளுக்கும் ஒரு திட்டமான அளவு மின்னுற்ற கும் இடையே ஓர் உறவுமுறை அமைந்துள்ளது. இதுதான் அவர் கண்டறிந்த விதியாகும். அன்றியும், ஒரு குறிப்பிட்ட திட்டமான அளவு மின் ஒற்றலால் உருமாற்றம் அடைந்த பொருள்களின் பொருண்மைகள் அப்பொருள்களின் சமபல. எடைகளுடன் (Equivalent weights) உறவு கொண்டுள்ளன என்றும் அவர் கண்டு பிடித்தார்; எனவே, சாதாரண நிலை யிலுள்ள பொருள்களில்-ஒரு வலுவெண்ணைக் கொண்ட பொருள்களில் - உருமாற்றம் அடைந்த பொருள்களின் பொருண்மைகள் அப்பொருள்களின் அணு-எடைகளுடன் உறவு கொண்டுள்ளன. மின்னுற்றல்கூட அணு அமைப் பினேக் கொண்டது என்பதை இக் கண்டுபிடிப்பு உணர்த் திற்று; இந்த அணு அமைப்பில்ை ஒரு வேதியியற் கூட்டுப் பொருளின் ஒவ்வோர் அணுவும், அல்லது மூலக்கூறும் (Molecule) ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மின்னற்ற லின் அணுக்களுடன்-அவை அதுகாறும் அறிவியலறிஞர்கள் அறியாத முறையிலிருப்பினும்-தொடர்பு கொண்டுள்ளது என்பது தெரிந்தது. இது கி.பி. 1848லேயே வெபர்" என் பாரால் குறிப்பிடப்பெற்றதாகும். இது ஒரே அளவுள்ள மின்னுற்றல் எப்பொழுதும் ஒரே அளவுள்ள பொருளுடன்வேறு விதமாகக் கூறினல், ஒரே எண்ணிக்கையுள்ள அணுக் களுடன்--ஏன் உறவு கொண்டுள்ளது என்பதைக் காரண காரிய முறையில் தெளிவாக்குகின்றது. இன்று, மோல் (Mole) grougth &grib-siggi (Gramme-atom) grough அடிப்படைப் பொண்மை அலகுகளாக வழக்கத்தில் மேற் கொள்ளப்பெற்று வருகின்றன. ஒரு பொருளின் மூலக்கூறுஎடை (Molecular weight) எந்த எண்ணுல் குறிக்கப்பெறு கின்றதோ அத்தனை கிராம் எடையளவு பொருள்தான் அப் יאיא אילתי" 43 Gaul Jrf-Weber.