பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அணுக்கரு பெளதிகம் மிகச் சிறியவை. பருமனைப் பொறுத்த மட்டிலும் இந்த நுண்ணிய துகள்களுடன்தான் அணுக்களை ஒப்பிடலாம் என்று டெமாக்ரீட்டஸ் கருதினுர், மேலும் முன்னேற்றம்: அடுத்த சில ஆண்டுகளில் மின்சாரத் துறையைப்பற்றிய அறிவியல் இன்னும் ஒருபடி முன்னேக்கிச் செல்ல முடிந்தது. ஃபாரடேயின் கண்டுபிடிப்புக்களின்மூலம் மின்னுற்றலின் அணுக்களின் இருப்பு சாத்தியப்படக் கூடியதொன்ருயிற்று என்பது தெரிந்தது; ஆல்ை, அவை வேதியியல் தனிமங் களின் அணுக்களுடன் கொண்டுள்ள உறவுடன் அறியப் பெறுகின்றனவேயன்றி, தனித்த நிலையில் அன்று. தனித்த நிலையிலுள்ள மின்னுற்றல் அணுக்கள், அஃதாவது சாதாரண சடப்பொருளுடன் பிணைக்கப்பெருத அணுக்கள், எதிர்முனைக் கதிர்களில் (Cathode rays) ஹிட்டார்ஃப்" என்பவரால் கண்டு பிடிக்கப் பெற்றன; இக் கதிர்கள் உயர்ந்த முறையில் மெல்லி தாக்கப்பெற்ற வாயுக்களில் உண்டாகும் மின் இறக்கங் களின் விளைவாக உண்டாகுபவை. ஹிட்டார்ஃப் (கி. பி. 1824.1914) என்பார் காந்தப் புலனில் எதிர்முனைக் கதிர் களின் ஒதுக்கத்தை ஆராய்ந்து, இந்த ஒதுக்க அளவின் காரணமாக மின் ஏற்றத்திற்கும் எதிர்முனைக் கதிர்களில் இயங்கிச் செல்லும் துகள்களின் பொருண்மைக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிட முடியும் என்று கண்டறிந்தார். லாஷ்மிட்டின் காலத்திலிருந்து ஒரு தனிப்பட்ட அணுவின் பொருண்மையை நாம் அறிந்திருப்பதாலும், ஃபாரடேயின் கண்டுபிடிப்புக்களின் காரணமாக மின்னற்றல் அணுக்களின் பருமனே ஏறத்தாழக் கணக்கிடக் கூடுமாதலாலும், தனித்த நிலையில்-எதிர்முனைக் கதிர்களில்-மின்னுற்றவணு உறவு கொண்டிருக்கும் பொருண்மையின் அளவு நாம் சற்று முன் னர்க் குறிப்பிட்ட விகிதத் தொடர்புடன் அறுதியிடப் பெற் 49 gou-L-m solo-Hittorf.