பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

įv பல்கலைக் கழகப் பெளதிகப் பேராசிரியர்) இந்த மொழி பெயர்ப்பினை முழுதும் நோக்கி அச்சேறும் தகுதி யுடையதாக்கினர். அவருக்கு என் நன்றி. திருவேங்கடவன் அருளால் அவர் மேலும் மேலும் இத்தகைய தமிழ்ப் பணி யில் ஈடுபடுவாராக. நூற்ருண்டு விழாவினைக் கண்ட சென்னைப் பல்கலைக் கழகத்தினைப் பல துறைகளிலும் புகழுடன் விளங்கப் பேணி வளர்த்தவர்கள் அதன் துணைவேந்தர் சர். ஆ. இலக்குமண சாமி முதலியார் அவர்கள். கடந்த இருபத்தைந்து யாண்டு களாக அதனைக் கட்டிக்காத்துவரும் இவர் காலத்தில்தான் அஃது ஆல்போல் தழைத்து அருகுபோல்வேரூன்றியது. இவர் ஆட்சிப் பொறுப்பின்பொழுது தோன்றிய இந்த அறிவியல் குழந்தைக்கு இவரது நிறைந்த ஆசி உண்டு. இந்த மொழி பெயர்ப்பினை நானே வெளியிட்டுக்கொள்ள இசைவு தந்த இப்பெரியாருக்கும். அப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவிற்கும் (Syndicate) என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய நூல்கள் எண் னற்றவை. புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே: அந்த "மேன்மை கலைகளைத்" தமிழில் மொழி பெயர்ப்பாகவும், முதல்நூலாகவும் தோற்றுவித்தல் வேண் டும். மேஞட்டு மொழிகளினின்றும் அறிவியல் கருத்துக்கள் தமிழ்மொழியின்பால் வருவதற்கு மொழி பெயர்ப்பு சேது" ஒரு வழியாகும். இத்தகைய சேதுவை அமைக்கும் பணியில் சிறியேனின் தொண்டு, குளித்துத்தாம் புரண்டிட்டு ஒடித், தரங்கநீர் அடைக்கல்உற்ற சலம்இலா அணிலின்' தொண் டினைப் போன்றது. அந்த அணிலுக்கு இராமன் ஆசி கூறியது 3. பாரதியார்: கவிதைகள்-தமிழ்த்தாய்-9, 4. திருமாலே-27,